அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா! என்ன விதிமுறைகள்? யாருக்கு அனுமதி இல்லை?
லக்னோ: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு வருவோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையை கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி செய்து வைத்தார். இந்த பணிகள் தீவிரமடைந்துள்ளது.

ரூ 1800 கோடி மதிப்பீட்டில் இந்த கோயில் கட்டுமான பணிகள் நடந்து வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 54,700 சதுர அடி பரப்பளவில் 360 அடி நீளமும் 235 அடி அகலமும் கொண்டுள்ளது.
புயல், மழை, வெள்ளம், நில நடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களிலிருந்து பாதுகாக்கும் விதமாக கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் கும்பாபிஷேகத்திற்காக பல்வேறு நாடுகளில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது. இந்த விழாவுக்காக வெளிநாடு, இந்தியாவிலிருந்து 4000 துறவிகளுக்கும் 3000 விவிஐபிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துக கொள்கிறார். ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பர் ராய் விருந்தினர்கள் எதை செய்யலாம், எதை செய்யக் கூடாது என்பதற்கான வழிமுறைகள் குறித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது கோரிக்கை கடிதத்தில் மக்கள் சிரமப்படாமல் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். அனைவருமே பக்தர்களாகவே நுழைந்து செல்ல வேண்டும், விஐபிகளுக்கு என எந்த சலுகையும் கிடையாது. விருந்தினர்களுக்கான தங்குமிடம், உணவுகள் ஏற்பாடு செய்யப்படும். ராமரை பார்க்க செல்லும் போது கோயில் வளாகத்தில் செல்போன், கேமரா போன்றவற்றை எடுத்துச் செல்லக்கூடாது.
அயோத்திக்கு பார்வையாளர்கள் செல்ல ஜனவரி 20ஆம் தேதி பிற்பகலில் திட்டமிட வேண்டும். அழைப்பினர்கள் ஆதார் அட்டையை வைத்திருக்க வேண்டும். மொபைல், கேமரா, பர்ஸ் ஆகியவற்றை எடுத்துச் செல்ல கூடாது. காலை 11 மணிக்கு மைதானத்திற்குள் நுழைய வேண்டும். பிரான் பிரதிஷ்டை விழா 3 மணி நேரத்திற்கு மேல் நடக்கும்.
ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே அந்த இடத்தை அடையலாம். நோய் வாய்பட்டவர்கள், நடக்க முடியாதவர்கள் அல்லது வயதானவர்கள் ஆகியோர் கும்பாபிஷேக நாளில் வரக் கூடாது. பிப்ரவரி மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அழைப்புக் கடிதத்தில் ஒருவர் மட்டுமே வர அனுமதிக்கப்படுவார்கள். உடன் வந்தவர்களுக்கு அனுமதி இல்லை.
எந்த குழந்தைக்கு அனுமதி இல்லை. பிரதமர் நரேந்திர மோடி ஆலயத்தை விட்டு வெளியே சென்ற பிறகு அழைப்பாளர்கள் ஒவ்வொருவராக குழந்தை ராமரை தரிசனம் செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications