லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கும்பமேளாவின் போது நடத்தப்பட்ட.. போலி கொரோனா டெஸ்ட்கள்.. தொடர் புகாரையடுத்து விசாரணைக்கு உத்தரவு!

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரகாண்டில் கும்பமேளாவின் போது பொய்யான கொரோனா ரிப்போர்ட்கள் சமர்பிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதற்கு கும்பமேளா நடத்தியதும் ஒரு காரணம் என்று கடும் புகார்கள் வைக்கப்பட்டன. கும்பமேளா கடந்த ஏப்ரல் 1 முதல் 30ம் தேதி வரை நடத்தப்பட்டது.

கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்! கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்!

ஹரித்வார், டேராடூன், டெஹ்ரி, பவுரி ஆகிய மாவட்டங்களில் கும்பமேளா நடத்தப்பட்டது. வடஇந்தியாவில் பல லட்சம் பேர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இதன் காரணமாக நாடு முழுக்க கொரோனா பரவியதாக புகார் வைக்கப்பட்டது.

புகார்

புகார்

இந்த நிலையில் உத்தரகாண்டில் கும்பமேளாவின் போது பொய்யான கொரோனா ரிப்போர்ட்கள் சமர்பிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. பஞ்சாப் நபர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கி உள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த கும்பளேவில் கலந்து கொள்ளாத நபர் ஒருவருக்கு உத்தரகாண்டில் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டதாக அவரின் நம்பருக்கு மெசேஜ் சென்றுள்ளது. அவரை டெஸ்ட் எடுக்காமலே டெஸ்ட் எடுத்ததாக, அதுவும் உத்தரகாண்டில் டெஸ்ட் எடுத்ததாக் மெசேஜ் சென்றுள்ளது.

பொய்யான டெஸ்ட்

பொய்யான டெஸ்ட்

இது தொடர்பாக அவர் ஐசிஎம்ஆருக்கு மெயில் அனுப்பி புகார் அளித்து இருக்கிறார். பஞ்சாப்பை சேர்ந்த கும்பளேவில் கலந்து கொள்ளாத நபருக்கு உத்தரகாண்டில் டெஸ்டா என்று சந்தேகம் கொண்ட ஐசிஎம்ஆர் விசாரணை நடத்தி உள்ளது. இந்த விசாரணையில் உத்தரகாண்டில் இருக்கும் தனியார் டெஸ்ட் நிறுவனம், பஞ்சாப் நபரை டெஸ்ட் எடுக்காமலே டெஸ்ட் எடுத்துவிட்டதாக கூறி உள்ளது. அதோடு இவரை கும்ப மேளாவிற்கு சென்றவர் என்றும் டெஸ்டிங்கில் குறிப்பிட்டுள்ளது.

விசாரணை

விசாரணை

கும்ப மேளாவிற்கு சென்றவர்களை டெஸ்ட் எடுப்பதற்காக உத்தரகாண்ட் சுகாதாரத்துறை இந்த நிறுவனத்தை ஒப்பந்தம் செய்தது. இந்த நிறுவனம்தான் கும்பமேளா கொரோனா டெஸ்ட் என்று பஞ்சாப் நபரின் பொய்யான ரிப்போர்ட்டை சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து அந்த டெஸ்ட் நிறுவனத்தில் சோதனை செய்ததில் இதேபோல் பல பொய்யான கொரோனா சோதனைகளை அந்த நிறுவனம் நடத்தி, பொய்யான ரிப்போர்ட்களை சமர்ப்பணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எப்படி

எப்படி

உத்தரகாண்டில் பல்வேறு மாவட்டங்களில் 24 தனியார் கொரோனா சோதனை மையங்களுடன் கும்ப மேளா கொரோனா சோதனைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கும்ப மேளா சென்றவர்களுக்கு கொரோனா சோதனை செய்து ரிசல்ட் கொடுக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில்தான் ஒரு நிறுவனம் கொரோனா டெஸ்ட் ரிசல்ட்டில் மோசடி செய்தது அம்பலம் ஆகியுள்ளது.

சோதனை

சோதனை

இந்த 24 நிறுவனங்கள் மொத்தம் 5 லட்சம் கொரோனா சோதனைகள் வரை எடுத்துள்ளன. ஒரு நிறுவனம் செய்த மோசடி காரணமாக அனைத்து நிறுவனங்களின் டெஸ்ட்களையும் சோதனை செய்ய உள்ளனர். இது தொடர்பாக விசாரிக்கும்படி ஹரித்வார் மாவட்ட மேஜிஸ்டிரேட் உத்தரவிட்டுள்ளார்.

கமிட்டி

கமிட்டி

இதை விசாரணை நடத்துவதற்காக 3 பேர் கொண்ட குழுவையும் அமைத்து இருக்கிறார். 15 நாட்களில் இது தொடர்பாக ரிப்போர்ட் சமர்ப்பிக்க வேண்டும். விசாரணையில் குற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால் எப்ஐஆர் பதியப்படும் என்று ஹரித்வார் மாவட்ட மேஜிஸ்டிரேட் உத்தரவிட்டுள்ளார்.

English summary
Fake Covid 19 test submitted during Kumbh Mela: Uttarakhand issued an order for probe on private centers testings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X