ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதிபதிக்கு மிரட்டல் கடிதம்.. பாதுகாப்பை அதிகரித்த போலீஸ்!
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் வீடியோ பதிவு செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்ட நீதிபதிக்கு மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள இஸ்லாமிய வழிபாட்டுதளமான ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியின் வளாக சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தைச் சேர்ந்த 5 பேர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கூடிய கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து நீதிமன்ற ஆணையர் அஜய் மிஸ்ரா தலைமையிலான குழு, மசூதியில் 3 நாட்கள் ஆய்வு நடத்தியது.

சிவலிங்கம் கண்டுபிடிப்பு?
இந்த ஆய்வின் போது ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இதனால் மசூதி அமைந்துள்ள பகுதிக்குள் நுழைய வாரணாசி நீதிமன்றம் தடை விதித்தது. இதனிடையே நீதிமன்ற ஆணையர் நடத்திய ஆய்வின் ஒரு பகுதி அறிக்கை மட்டும் வெளியே கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நீதிபதிக்கு மிரட்டல்
ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வீடியோ பதிவு செய்து ஆய்வு நடத்த உத்தரவிட்ட நீதிபதி ரவிக்குமார் திவாகருக்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் இஸ்லாமிய ஆகாஸ் இயக்கத்தைச் சேர்ந்த காசிஃப் அஹ்மத் சித்திக் என்பவரால் எழுதப்பட்டுள்ளது.

கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது?
அந்தக் கடிதத்தில், ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்துவது வழக்கமான நடைமுறைதான் என்று கூறுகிறீர்கள். நீங்கள் ஒரு இந்துமத வழிப்பாட்டாளர். மசூதியை கோயிலாக அறிவிப்பீர்கள். ஒரு இந்து நீதிபதியிடம் இருந்து எந்தவொரு இஸ்லாமியரும் நீதியை எதிர்பார்க்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் தீவிர விசாரணை
இதுகுறித்து நீதிபதி ரவிக்குமார் திவாகர் போலீஸாரிடம் புகாரளித்துள்ளார். இந்த புகார் குறித்து துணை ஆணையர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நீதிபதியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 9 போலீஸார் நீதிபதியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட்கு வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications