உ.பி. முதல்வர் அல்லது பிரதமர்தான்-ஜனாதிபதி பதவி என் கனவு லிஸ்ட்டிலேயே இல்லை-மாயாவதி அடேங்கப்பா பதில்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக மீண்டும் பதவி ஏற்க வேன்டும் அல்லது நாட்டின் பிரதமராக வேண்டும் என்பதுதான் என் கனவு; ஜனாதிபதியாக வேண்டும் என்பது எல்லாம் நான் நினைக்காதது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விளக்கம் அளித்துள்ளார்.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் பாஜக, சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் உள்ளிட்டவை கடுமையாக மோதிக் கொண்டன. ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியோ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபாடு காட்டவில்லை. பெயரளவுக்கு வேட்பாளர்களை அறிவித்து ஒதுங்கிக் கொண்டது.

உ.பி. தேர்தல் மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் தீவிர தேர்தல் பிரசாரமும் செய்யவில்லை. அதனால் மாயாவதியின் நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. மாயாவதி மீதான வழக்குகளை முன்வைத்து மத்திய அரசு மிரட்டிவிட்டது; அதனால் மாயாவதி, பாஜகவை வெல்ல வைக்க அமைதி காக்கிறார் என காங்கிரஸ் தலைவர் சாடினர்.

அகிலேஷ் தாக்குதல்
இதில் ஒருபடிமேலே சென்று விமர்சித்தவர் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ். மாயாவதிக்கு ஜனாதிபதி பதவியை தரப் போகிறது பாஜக. அதனால்தான் மாயாவதி மவுனமாக இருக்கிறார். பாஜகவை வெல்ல வைக்க மாயாவதி அமைதி காக்கிறார் என விமர்சித்தார். இதற்கும் கூட பெரிய அளவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் பதில்களும் வரவில்லை.

மாயாவதி விமர்சனம்
உ.பி. தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது; இருந்தாலும் பல தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி கடும் போட்டியை ஏற்படுத்தியிருந்தது. பகுஜன் சமாஜ் படுதோல்வியடைந்த போதும் அகிலேஷ் யாதாவையே மாயாவதி விமர்சித்திருந்தார். சமாஜ்வாதி கட்சியை முஸ்லிம்கள் நம்பி வாக்களித்துவிட்டதாகவும் மாயாவதி கூறியிருந்தார்.இந்நிலையில் மாயாவதியை அகிலேஷ் யாதவ் மீண்டும் விமர்சித்திருந்தார். அடுத்த சில மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நிலையில் மீண்டும் மாயாவதியின் தலையை அகிலேஷ் யாதவ் உருட்டத் தொடங்கினார். பாஜகவின் விருப்பப்படி மாயாவதி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என அகிலேஷ் யாதவ் கூறியிருந்தார்.

என் கனவுகள்..மாயாவதி
இதற்கு மாயாவதி அளித்த பதில்: என்னைப் பொறுத்தவரை உ.பி.யின் முதல்வராக மீண்டும் பதவியேற்க வேண்டும்; அல்லது நாட்டின் பிரதமராக வேண்டும் என்பதுதான் கனவு. ஜனாதிபதி பதவி குறித்து எல்லாம் நான் கனவு கண்டதே இல்லை. உ.பி.யில் பாஜக வெற்றி பெற்றதற்கு சமாஜ்வாதி கட்சிதான் பொறுப்பாக வேண்டும். சமாஜ்வாதி கட்சிக்கு என்னை ஜனாதிபதியாக்கிப் பார்க்க வேண்டும் என்கிற கனவு இருக்கிறது போல .இவ்வாறு மாயாவதி கூறினார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications