ப்பா.. ஒரே தேர்தலில் 7 சாதனைகளை படைத்த யோகி.. மூடநம்பிக்கைகளை தகர்த்து முன்னேறிய வரலாறு!
லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் மீண்டும் ஆட்சியை பிடிப்பதோடு, யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் யோகி ஆதித்யநாத் 7 சாதனைகளை படைத்துள்ளார். அத்துடன் மூடநம்பிக்கையையும் தகர்த்து அவர் வாகைசூடியுள்ளார்.
இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் உத்தர பிரதேசம். இங்கு 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 7 கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதில் பாஜக அமோக வெற்றி பெற்று உத்தர பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துள்ளது. சட்டசபை தேர்தலில் முதல் முறையாக களமிறங்கிய யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்றுள்ளார். இவர் கோரக்பூர் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்எல்ஏவாக ஆகியுள்ளார். இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த இந்த தேர்தலில் யோகி ஆதித்யாத் 7 சாதனைகளை செய்துள்ளார். அதன் விபரம் வருமாறு:

முதல் சாதனை
இந்தியாவில் அதிக சட்டசபை தொகுதிகள் உள்ள உத்தர பிரதேச மாநிலத்துக்கு முதன் முதலாக 1952 மே 20ல் சட்டசபை தேர்தல் நடந்தது. கடந்த 70 ஆண்டில் 21 முதல்வர்களை உத்தர பிரதேசம் கண்டுள்ளது. இதில் முதல்வராக செயல்பட்டவர்களில் 5 ஆண்டு பதவியை முழுவதுமாக பூர்த்தி செய்து அடுத்த சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததாக சரித்திரம் இல்லை. இதை யோகி ஆதித்யநாத் தகர்த்து சாதனை படைத்துள்ளார்.

2 வது சாதனை
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தை சேர்த்து 5 முதல்வர்கள் மட்டுமே தொடர்ந்து ஆட்சியை பிடித்துள்ளனர். இதற்கு முன்பு சாம்பூர்னநந்தா 1957, சந்திரபானு 1962, ஹேமாவதி நந்தன் பகுகுணா 1974, நாராயண் தத் திவாரி 1985, ஆகியோர் தான் இந்த ரெக்கார்டை இதற்கு முன்பு வைத்திருந்தனர். இருப்பினும் இவர்கள் பேரும் அடுத்த முறை முதல்வராக பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் யோகி ஆதித்யநாத்துக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

3வது சாதனை
உத்தர பிரதேச மாநிலத்தில் 1985 காலக்கட்டத்தில் இடைக்கால முதல்வராக காங்கிரஸ் சார்பில் என்டி திவாரி இருந்தார். அதன்பிறகு நடந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார். அதன்பிறகு யாரும் தொடர்ச்சியாக முதல்வர் பதவியை வகித்தது இல்லை. 37 ஆண்டுகளுக்கு பிறகு யோகி ஆதித்யநாத் தொடர்ந்து முதல்வராக உள்ளார்.

4வது சாதனை
உத்தர பிரதேச வரலாற்றில் பாஜகவை சேர்ந்த 4 பேர் முதல்வராக பொறுப்பு வகித்துள்ளனர். யோகி ஆதித்யநாத்துக்கு முன்பாக பாஜகவின் கல்யாண் சிங், ராம் பிரகாஷ் குப்தா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் முதல்வராக செயல்பட்டனர். இவர்களில் யாரும் மீண்டும் ஆட்சியை பிடிக்கவில்லை. இந்த வாய்ப்பு யோகி ஆதித்யநாத்துக்கு மட்டும் கிடைத்துள்ளது.

5வது சாதனை
மேலும் கடந்த 15 ஆண்டுகளாக மாநிலத்தில் முதல்வர் பதவியை அலங்கரித்தவர்கள் எம்எல்சிக்களாகவே (உத்தரபிரதேச மேல்சபை உறுப்பினர்)இருந்தனர். அதாவது 2007 முதல் 2012 வரை முதல்வராக இருந்த மாயாவாதி, 2012ல் இருந்து 2017 வரை முதல்வராக இருந்த சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ் ஆகியோர், 2017 ல் இருந்து 2022 வரை முதல்வராக இருந்த யோகி ஆதித்யநாத் என மூவரும் எம்எல்சிக்களாகவே இருந்தனர். 2017ல் எம்பியாக இருந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றார். அதன்பின் அவர் எம்பி பதவியை ராஜினாமா செய்து எம்எல்சியாகி முதல்வர் பதவியை தொடர்ந்தார். தற்போது கோரக்பூர் நகர் தொகுதியில் யோகி ஆதித்யநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவர் எம்எல்ஏவாக முதல்வர் பதவியில் அமர உள்ளார்.

6 வது சாதனை
உத்தர பிரதேசத்தின் 21 முதல்வர்களில் 3 பேர் மட்டுமே 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளனர். அதாவது 2007-2012 வரை மாயாவதி, 2012-2017 வரை அகிலேஷ்யாதவ், 2017-2022 வரை யோகி ஆதித்யநாத். இதன்மூலம் அந்த மாநிலத்தில் 5 ஆண்டு ஆட்சியை முழுமையாக நிறைவு செய்த முதல்வர்களின் பட்டியலில் யோகி ஆதித்யநாத்தும் இடம் பிடித்துள்ளார். மாயாவதி, அகிலேஷ் யாதவுக்கு அடுத்து 3வது இடத்தில் யோகி ஆதித்யநாத் இந்த பெருமையை பெற்றுள்ளார். இதில் இவர்கள் 2 பேரின் கட்சிகளும் அடுத்த தேர்தல்களில் வெற்றி பெறாத நிலையில் யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்றுள்ளது சாதனையாக பார்க்கப்படுகிறது.

மூடநம்பிக்கை
உத்தர பிரதேச அரசியலில் மூடநம்பிக்கை ஒன்று உள்ளது. அதாவது டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தின் கவுதம் புத்த நகர் மாவட்டத்துக்கும் பொதுவாக நொய்டா குடியிருப்பு மற்றும் தொழில்துறை நகரம் உள்ளது. அரசியலில் பதவியில் இருப்பவர்கள் இங்கு சென்றால் அடுத்த தேர்தலில் தோல்வியடைவார்கள் அல்லது அவர்களின் பதவிக்காலத்தை முழுவதுமாக முடிக்கமாட்டார்கள் என்ற பேச்சு உள்ளது. ஆனால் 2018 ல் டிசம்பர் 25ல் இங்கு பிரதமர் நரேந்திர மோடி, யோகி ஆதித்யநாத் ஆகியோர் சென்று மெட்ரோ சேவையை துவக்கி வைத்தனர்.
Recommended Video

சாதித்த யோகி
அப்போது சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‛‛பிரதமர் நரேந்திர மோடி மத்தியிலும், யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேசத்திலும் ஆட்சியை இழப்பார்கள்'' எனக்கூறினார். ஆனால் நொய்டா சென்றால் அரசியல் தலைவர்கள் தோற்பார்கள் என்ற மூடநம்பிக்கையை நரேந்திர மோடியும், யோகி ஆதித்யநாத்தும் பொய்யாக்கி உள்ளனர். அதாவது 2019 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியும், 2022 உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் யோகி ஆதித்யநாத்தும் வெற்றி பெற்று மூடநம்பிக்கைக்கு முடிவு கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications