கால்வாய் நீரில் ஆட்டம் கண்ட மர்ம பொருள்.. ஏலியன் என நினைத்து அச்சமடைந்த உ.பி. கிராம மக்கள்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் தன்கார் நகரில் அயன்மேன் பலூன் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஏலியன்கள் பூமிக்குள் வந்துவிட்டனரா என கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

பூமிக்குள் அவ்வப்போது ஏலியன்கள் வந்து செல்வதாக நம்பப்படுகிறது. ஏதேனும் ஒவ்வாத பொருள் பூமியில் கிடைத்தால் அவை ஏலியன்களின் பறக்கும் தட்டின் உதிரிபாகம் என நினைப்பது வழக்கம்.

அதன் பின்னர் அந்த பொருள் ஏதேனும் விமானத்தின் பாகமாகவோ அல்லது ஹெலிகாப்டரின் பாகமாகவோ இருக்கும்.

ஏலியன்

ஏலியன்

அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கிரேட்டர் நொய்டாவில் தன்கார் நகரில் பலூன் போன்ற ஒரு பொருள் விழுந்து கிடந்தது. இதை அவ்வழியாக செல்வோர் வருவோர் பார்த்து சென்றனர். இது ஏலியன்களாக இருக்குமோ என சந்தேகமும் அவர்களுக்கு எழுந்தது.

போலீஸார்

போலீஸார்

பார்சால் கிராமத்தில் விழுந்த அந்த பொருளை காண ஏராளமானோர் கூடிவிட்டனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். விசாரணையில் அந்த பொருள் ஏலியன்களுக்கு சொந்தமானது அல்ல என போலீஸார் தெரிவித்தனர்.

காற்று நிரப்பப்பட்ட பலூன்

காற்று நிரப்பப்பட்ட பலூன்

அது குறித்து போலீஸார் கூறுகையில் காற்று நிரப்பப்பட்ட பலூன் போன்ற ஒரு பொருள் வானத்திலிருந்து கீழே விழுந்தது. அது கால்வாய் அருகே உள்ள புதரில் விழுந்துவிட்டது. அந்த பலூனின் ஒரு பகுதி கால்வாயில் உள்ள தண்ணீரில் பட்டதால் அது லேசான ஆட்டம் கண்டது. இதை பார்த்த கிராமத்தினர் அச்சமடைந்தனர்.

ஏலியன்கள்

ஏலியன்கள்

மேலும் அந்த பொருள் பலூன் என்றால் பலூன் போல் இல்லாமல் இருந்ததே மக்களின் அச்சத்திற்கு காரணமாகும். அது அயன் மேன் வடிவில் இருந்தது. வழக்கத்திற்கு மாறாக இருந்ததால் மக்கள் இதை ஏலியன்கள் என நினைத்துக் கொண்டனர் என போலீஸார் தெரிவித்தனர். அது அசம்பாவித பொருளும் அல்ல என்றும் காற்று இல்லாததால் கீழே விழுந்துவிட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+