உ.பி தொழிலதிபர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்.. மலைத்துப்போன அதிகாரிகள் - துணைக்கு வந்த ராணுவம்
உத்தர பிரதேசத்தில் தொழிலதிபர் பியூஷ் ஜெயின் வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
லாக்னௌ: உத்தரபிரதேச மாநிலத்தில் தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 150 கோடி ரூபாய் பணம் பதுக்கி வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். கட்டுக்கட்டாக குவிந்திருந்த பணத்தை எண்ண முடியாமல் மலைத்துப் போன அதிகாரிகள் பாதுகாப்புக்கு ராணுவத்தை வரவழைத்தனர். அளவுக்கு அதிகமான ரொக்கம் பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த உளவுத்துறை தகவலின் பேரில், வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயின். இவர், திருமூர்த்தி பிராக்ரன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நறுமண திரவியம் தயாரித்து உள்நாடு, வெளிநாடுகளில் விற்பனை செய்து வருகிறார். நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார். வெளிநாடுகளிலும் இவருக்கு கிளைகள் உள்ளன.
தொழிலதிபர் பியூஷ் ஜெயின், ஜிஎஸ்டி மற்றும் வருமான வரிஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஜிஎஸ்டி புலனாய்வு துறை அதிகாரிகள், வருமான வரித் துறை அதிகாரிகள் இணைந்து பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் வியாழக்கிழமையன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். கான்பூர், கன்னோஜி, மும்பை மற்றும் குஜராத் உட்பட பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.

மலைத்துப்போன அதிகாரிகள்
இதில் பியூஷ் ஜெயினின் கான்பூர் வீட்டில் கட்டுகட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த பணத்தை இயந்திரங்கள் மூலம் அதிகாரிகள் எண்ணத்தொடங்கினர். 500 ரூபாய் நோட்டுகள் பார்சல் செய்யப்பட்டு கட்டுகட்டாகமலைபோல குவித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இயந்திரங்கள் உதவி
பணத்தை எண்ண முடியாமல் சோர்ந்து போகவே, ஸ்டேட் வங்கி அலுவலர்கள் உதவிக்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் பணம் எண்ணும் இயந்திரங்களுடன் வந்து இடைவிடாது பணத்தை எண்ணினர். பியூஷ்ஜெயின் வீட்டில் ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இயந்திரங்கள் உதவியுடன் பணத்தை எண்ணும் பணி இரவு பகலாக நடைபெற்றது. பாதுகாப்புக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.800 கோடி ஏய்ப்பு
தொழிலதிபர் பியூஷ் ஜெயின் ரூ.800 கோடி அளவுக்கு வரிஏய்ப்பு செய்திருப்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலி பில்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது. இதற்கான ஆதாரங்களையும் வருமானவரித் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பணத்தை பதுக்கி வைத்தது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வருமானத்திற்கு அதிகமான பணம்
அளவுக்கு அதிகமான ரொக்கம் பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த உளவுத்துறை தகவலின் பேரில், வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும் பான்மசாலா பொருட்களை உரிய பில் இல்லாமல் போலியான இன்வாய்ஸ்கள் தயாரிக்கப்பட்டு அதன் மூலம் அனுப்பி வைத்து வருமானத்திற்கு அதிகமான பணம் சேர்த்ததும் தெரியவந்துள்ளது.

மிகப்பெரிய ஆபரேசன்
இந்த சோதனை குறித்து கூறியுள்ள வருமான வரித்துறை அதிகாரிகள், பிக் பஜார் என்ற பெயரில் தொழிலதிபர் பியூஷ் ஜெயினின் வீடு, அலுவலகங்களில் ஒரே நேரத்தில் திடீர் சோதனை நடத்தினோம். இதில் போலி நிறுவனங்கள் பெயரில் அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு சொந்தமான நறுமண திரவிய விற்பனை நிலையங்கள், பெட்ரோல் நிலையங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதுவரை ரூ.150 கோடி பறிமுதல் செய்யப்பட்டு ஆர்பிஐக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அகிலேஷ் யாதவுக்கு பின்னடைவு
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமான பியூஷ் ஜெயின், கடந்த நவம்பரில் சமாஜ்வாதி அக்தர்' என்ற வாசனை திரவியத்தை அறிமுகம் செய்தார். இந்த விழாவில் அகிலேஷ் யாதவ் உட்பட அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்தஆண்டு தொடக்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நேரத்தில் சமாஜ்வாதி தலைவர்அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமான தொழிலதிபர் வீட்டில் ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications