‛லிவ் இன் ரிலேஷன்சிப்’ என்பது ‛டைம்பாஸ்’.. பாதுகாப்பு கேட்ட ஜோடிக்கு ஏமாற்றம்.. ஹைகோர்ட் அதிரடி
லக்னோ: ‛லிவ் இன் ரிலேஷன்சிப்' உறவில் இருக்கும் ஜோடியின் போலீஸ் காவல் கோரிய மனுவை தள்ளுபடி செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதோடு ‛லிவ் இன் ரிலேஷன்சிப்' என்பது டைம்பாஸ். அது ஒரு நேர்மையற்ற உறவு என உயர்நீதிமன்றம் கூறியது.
உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் 22 வயது இளைஞர். இவரும் 20 வயது இளம்பெண்ணும் லிவ் இன் ரிலேஷன்சிப்பில் உள்ளனர். இந்நிலையில் தான் இளம்பெண்ணின் குடும்பத்தின் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த இளைஞர் மீது இந்திய தண்டனை சட்டம் 366 (திருமணத்துக்கு வற்புறுத்தி பெண்ணை கடத்துதல்) உள்பட சில பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து அந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், லிவ் இன் ரிலேஷன்சிப்பில் இருக்கும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அந்த ஜோடி தரப்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் தான் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ராகுல் சதுர்வேதி மற்றும் முகமட் அசார் ஹுசைன் இத்ரிசி மனுவை விசாரித்தனர். அப்போது இளம்பெண் சார்பில், ‛‛எனக்கு 20 வயது ஆகிறது. நான் எனது எதிர்காலத்தை தீர்மானித்து கொள்ள சட்டம் அனுமதி அளிக்கிறது. இதனால் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதோடு என் ஜோடியின் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். ஏனென்றால் என் தந்தை போலீசில் எதுவும் புகார் அளிக்கவில்லை'' என வாதிடப்பட்டது.
மாறாக இளம்பெண்ணின் குடும்பத்தின் சார்பில், ‛‛தற்போது உறவில் உள்ள அந்த இளைஞர் ஒரு ரோட் ரோமியோ. அவர் மீது ஏற்கனவே உத்தர பிரதேச மாநிலத்தில் குண்டர் சட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடன் வாழ்வதால் எங்கள் வீட்டு பிள்ளைக்கு நல்ல எதிர்காலம் அமையாது'' என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார். அப்போது நீதிபதிகள் கூறியதாவது: உச்சநீதிமன்றம் பல லிவ் இன் ரிலேசன்சிப் வழக்குகளை விசாரித்து உள்ளது. இந்த வேளையில் உறவில் உள்ள நபர்களின் வயது மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. மனுதாரர் தரப்பு என்பது 20, 22 வயதில் உள்ளனர். வாழ்க்கை என்பது ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்ட படுக்கையல்ல. கடினமான காலங்களை கொண்டது.
உண்மையை சொல்லப்போனால் ஒவ்வொரு தம்பதிகளும் கடினமான காலத்தை சந்திக்கின்றனர். இது எங்களின் அனுபவத்தின் மூலமாக கூறுகிறோம். ஆனால் லிவ் இன் ரிலேஷன்சிப் என்பது எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு, மோகத்தினால் (infatuation) வந்திருக்கலாம். மேலும் லிவ் இன் ரிலேஷன்சிப் என்பது ஒரு டைம்பாஸ் போன்றதாக இருக்கிறது. அது கண்ணாடி போல் உடையக்கூடியது. இந்த உறவு என்பது நிலையற்ற ஒன்றாகும்'' என நீதிபதிகள் கூறினர். மேலும் அவர்கள் போலீஸ் பாதுகாப்பு கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications