உபியில் சிறுமிகள் பலாத்கார கொலை: அரசு எப்போது விழித்துக்கொள்ளும்.. யோகிக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் பட்டியல் இனத்தை சேர்ந்த 2 சிறுமிகள் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள எதிர்க்கட்சிகள் ஆளும் உத்தர பிரதேச அரசு எப்போது விழித்துக்கொள்ளும் என அம்மாநில முதவர்கள் யோகி ஆதித்யநாத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் நிகாசன் பகுதியை சேர்ந்த சிறுமிகள் இருவர் கடந்த புதன்கிழமை அன்று மாட்டுக்கு தீவனம் தயார் செய்தவற்காக வெளியில் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது பக்கத்து கிராமத்தினரை சேர்ந்த வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்களில் அந்த வழியாக சென்றுள்ளனர்.

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை

அப்போது சிறுமிகள் இருவரும் காட்டில் தனியாக இருப்பதை பார்த்த அந்த வாலிபர்கள் 2 சிறுமிகளையும் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அந்த வாலிபர்கள் கூட்டாக 2 சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். நடந்த சம்பவத்தை சிறுமிகள் வெளியில் கூறி விடுவார்கள் என பயந்துபோன வாலிபர்கள், தங்கள் மீது எந்த சந்தேகமும் வரக்கூடாது என்பதற்காக சிறுமிகள் இருவரையும் அங்குள்ள மரத்தில் தூக்கில் தொங்கவிட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

பிணமாக மீட்பு

பிணமாக மீட்பு

இந்த நிலையில், மரத்தில் 2 சிறுமிகள் பிணமாக தொங்குவதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இது குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 சிறுமிகளையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 2 சிறுமிகளும் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

6 பேர் கைது

6 பேர் கைது

பட்டியல் இன சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த பாதக செயலில் ஈடுபட்ட 6 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 6 பேர் மீதும் போலீசார் போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது நாடு முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யோகி ஆதித்யநாத்துக்கு கேள்வி

யோகி ஆதித்யநாத்துக்கு கேள்வி

இந்த நிலையில், மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள் குறைந்து வருவதாக கூறி வரும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை இந்த விவகாரத்தில் எதிக்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. குறிப்பாக 'உத்தர பிரதேச அரசு எப்போது விழித்துக்கொள்ளும்' என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதேபோல் சமாஜ்வாடி கட்சித்தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோரும் யோகி ஆதித்யநாத் அரசை கடுமையாக விளாசியுள்ளனர்.

மிகவும் தீவிரமானது

மிகவும் தீவிரமானது

அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- ''நிக்‌ஷன் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் தலித் சகோதரிகள் இருவரை கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். குடும்பத்தினர் ஒப்புதல் இன்றி பஞ்சநாமாவில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளதாகவும் சிறுமிகளின் உடல் பிரதேச பரிசோதனை செய்யப்பட்டதாகவும் பெண்ணின் தந்தை எழுப்பிய குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. விவசாயிகளை தொடர்ந்து தற்போது தலித் பெண்கள் லக்கிம்பூர் கேரியில் கொல்லப்பட்டுள்ளனர்'' என்றார்.

குற்றங்கள் அதிகரிப்பது ஏன்?

குற்றங்கள் அதிகரிப்பது ஏன்?

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- ''லகிம்பூரில் இரண்டு தலித் சிறுமிகள் கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை உறைய வைப்பதாக அமைந்துள்ளது. பட்ட பகலில் சிறுமிகள் கடத்தப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பேப்பர்களிலும், தொலைக்காட்சிகளிலும் போலியாக விளம்பரம் செய்வதால் மட்டும் சட்டம் ஒழுங்கு மேம்பட்டு விடாது. உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான கொடூர குற்றங்கள் அதிகரிப்பது ஏன்? அரசு எப்போது விழித்துக்கொள்ளும்? என கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அரசியல் ஆக்குவார்கள்

அரசியல் ஆக்குவார்கள்

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் யோகி ஆதித்யநாத் அரசை விளாசியுள்ளார். இது குறித்து மாயாவாதி கூறுகையில், 'தற்போதை அரசாங்கத்தின் மீது குற்றவாளிகளுக்கு எந்த அச்சமும் இல்லை' என்றார். ஆனால், தலித் சிறுமிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசின் நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ள துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுர்யா கூறுகையில், 'லகிம்பூர் சம்பவம் துயரமானது. துரதிர்ஷ்டவசமானது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதை விட இதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவார்கள் என நான் எதிர்பார்த்தேன்' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+