சில ஆயிரம் போஸ்டிங்தான்.. 36 லட்சம் பேருக்கு வேலை இல்லை! உ.பி அரசு மீது ப.சிதம்பரம் கடும் தாக்கு
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் PET தேர்வு எழுத முக்கிய நகரங்களில் இளைஞர்கள் கூடியதால் நேற்று (அக்.16) மாநிலத்தின் பல ரயில் நிலையங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
போதிய ரயில்கள் இயக்கப்படாததால் இளைஞர்கள் ஒரே ரயிலில் நெரிசலோடு பயணித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின.
இது குறித்து அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.

தேர்வு
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 'உத்தரப் பிரதேச துணைப் பணியாளர் தேர்வாணையத்தின்' (UPSSSC) முதல்நிலை தகுதித் தேர்வு கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த தேர்வுகள் காலை 10-12 மணி வரையிலும் பிற்பகல் 3-5 மணி வரையிலும் நடைபெற்றன. இவ்வாறு இருக்கையில் தேர்வு மையங்கள் முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்டிருந்தால் தேர்வை முடித்து வீடு திரும்ப இளைஞர்கள் ரயிலில் நெரிசலாக பயணித்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின.

37 லட்சம் பேர்
அதாவது, ரயிலில் இடம் பிடிப்பதற்கு முந்தியடித்துக்கொண்டு இளைஞர்கள் ஏறியுள்ளனர். இடம் கிடைக்காதவர்கள் படிகளிலும், கம்பியை பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டும் ஆபத்தான முறையில் பயணித்திருக்கின்றனர். மேலும், ஏசி பெட்டிகளையும், பொருட்களை ஏற்றிச்செல்லும் பெட்டிகளையும் அவர்கள் ஆக்கிரமித்தனர். போதிய ரயில்கள் ஏற்பாடு செய்யப்படாததே இந்த நெரிசலுக்கு காரணம் என இளைஞர்கள் குற்றம்சாட்டினர். இந்த தேர்வுக்கு சுமார் 37.58 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்திருந்துள்ளனர். இதில் 25.11 லட்சம் பேர் தேர்வெழுதியுள்ளனர். 12.46 லட்சம் பேர் அதாவது 33% பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. முறையான போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படாததன் காரணமாகதான் இவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லையென சொல்லப்படுகிறது.

2 கோடி வேலை
இது குறித்து அரசியல் தலைவர்கள் பலர் தங்களது கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். "ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என பாஜக அரசு அறிவித்தது. ஆனால் தற்போது இளைஞர்கள் வேலையில்லாமல் ஆதரவற்ற நிலையில் இருப்பதை காண முடிகிறது. இதை கண்டும் காணாதது போல் பிரதமர் அமைதியாக இருக்கிறார்." என்று ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். தேர்வுக்கு போதிய போக்குவரத்து முன்னேற்பாடுகள் செய்யப்படாததாலும், வெள்ளம் பல இடங்களை சூழ்ந்துள்ளதாலும் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ப.சிதம்பரம் ட்வீட்
தற்போது இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ள கருத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவர் கூறியுள்ளதாவது, "உத்தரப் பிரதேசத்தில் சில ஆயிரம் காலி இடங்களுக்கு 37 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் அதிகபட்சமாக 1 லட்சம் பேர் தேர்வானாலும் கூட மீதமுள்ள 36 லட்சம் பேர் வேலையில்லாமல்தான் இருப்பார்கள் என்பதை பாஜவும், யோகி ஆதித்யநாத்தும் ஒப்புக்கொள்வார்களா?

சிந்தனைக்கு அப்பாற்பட்ட விஷயம்
மத்தியிலும், மாநிலத்திலும் என இரட்டை என்ஜின் ஆட்சி என்று கூறிகொண்ட அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது? உத்தரப் பிரதேசத்திற்கு இதுபோன்ற பயனற்ற இரட்டை என்ஜின் ஆட்சி வேண்டியதில்லை. மாறாக வேலை வாய்ப்பு, மத நல்லிணக்கம் மற்றும் பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் திறமையான அரசாங்கம் தேவை. தற்போதைய யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் சிந்தனைக்கும் திறனுக்கும் அப்பாற்பட்ட விஷயங்கள் இவை." என்று ட்விட்டரில் சிதம்பரம் விமர்சனம் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications