உ.பி.யை அச்சுறுத்தும் மர்ம வைரஸ் காய்ச்சல்.. 400 பேருக்கு சிகிச்சை.. குழந்தைகளுக்கும் ஆபத்து!
லக்னோ: உத்தர பிரதசத்தில் மர்ம வைரஸ் காய்ச்சலால் 400-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் குழந்தைகளையும் தாக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டம் போட்டு வரும் கொரோனாவை இன்னும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. பல மாநிலங்களில் கொரோனா குறைந்து விட்டாலும் கேரளா, மகாராஷ்டிராவில் தொற்று குறையவில்லை.
கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் முந்தைய அலையை விட அதிகமாக இருக்கும் குறிப்பாக குழந்தைகளை அதிகமாக தாக்கும் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மர்ம வைரஸ் காய்ச்சல்
கொரோனாவே முழுமையாக அழியாத நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு வைரஸ் நோய்களால் 400-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பீதி ஏற்பட்டுள்ளது. 40 குழந்தைகள் உட்பட 400-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளின் பிரிவில் மட்டும் 20 சதவீத நோயாளிகள் காய்ச்சல், சளியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்று சிகிச்சை பெற்றுள்ளனர்.

15 சதவீதம் அதிகரிப்பு
கடந்த மாதம் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 5 சதவீதமாக இருந்தது. கடந்த வாரத்தில் வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. பல்ராம்பூர் மருத்துவமனை, சிவில் மருத்துவமனை மற்றும் லோஹியா இன்ஸ்டிடியூட் மருத்துவமனை ஆகிய முக்கிய மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காநகர் பவுராவ் தியோராஸ், ராணி லக்ஷ்மிபாய், லோக்பந்து, ராம் சாகர் மிஸ்ரா மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குழந்தைகள்
குழந்தைகள் சிகிச்சை பிரிவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் தலைநகர் லக்னோவைச் சேர்ந்தவர்கள். லோஹியா மருத்துவமனையில் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவில் நோயாளிகள் நீண்ட வரிசையில் நின்று சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் டெங்கு, மலேரியா, டைபாய்டு ஆகிய நோய்க்களுக்கான பரிசோதனைகளின் எண்ணிக்கை இயல்பை விட அதிகமாக உள்ளது. பவுராவ் தியோராஸ் மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் சிகிச்சை பிரிவு முழுவதுமாக நிரம்பியுள்ளன.

காய்ச்சல் ஏற்படுவது ஏன்?
இந்த மர்ம வைரஸ் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது? என்று முழுமையாக தெரியவில்லை. இது தொடர்பாக சிவில் மருத்துவமனை இயக்குநர் சி.கே.நந்தா கூறுகையில், ' வானிலை வேகமாக மாறுகிறது. வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், வளிமண்டலத்தின் கீழ் மேற்பரப்பில் வைரஸ்கள் உள்ளன. வைரஸ் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வைரஸ் காய்ச்சல் மற்றும் பிற தொடர்புடைய நோய்களில் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது. டெங்கு நோய் பாதிப்பும் இருக்கிறது' என்று கூறினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications