இந்துத்துவா கோட்டையாக அறியப்படும் அயோத்தியில் யோகி போட்டியிடாதது ஏன்? உ.பி.யில் திணறுகிறதா பாஜக?
லக்னோ: அயோத்தி விவகாரத்துக்குப் பிறகு உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக எளிதாக ஜெயித்துவிடும் என்று கருதப்பட்ட நிலை மாறி, மீண்டும் ஆட்சியில் அமர பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது உத்தரப்பிரதேச பாஜக.
Recommended Video

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரப்பிதேச மாநிலத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் உத்தரப்பிரதேசத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
உத்தரப்பிரதேச தேர்தலைப் பொருத்தவரை நான்குமுனை போட்டி நடக்கிறது. ஆளும் பாஜக, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தேர்தல் ரேஸில் உள்ளன. ஆனால், பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சிக்குத்தான் பலத்த போட்டி நடக்கிறது. 2012 தேர்தலில் ஜெயித்து ஆட்சியைப் பிடித்தாலும், கடந்த தேர்தலில் பெற்ற தோல்வியில் இருந்து மீள சமாஜ்வாதி கட்சி அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.

உத்தரப்பிரதேசம்
அதேபோல், ஆளும் பாஜக உத்தரப்பிரதேசத் தேர்தலில் எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று கருதப்பட்டது. ஆனால் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க போராடி வருகிறது. அகிலேஷ் யாதவ் பாஜக-வுக்கு போட்டி கொடுத்தாலும், பாஜக தரப்பிலும் தொடர் அடிவிழுகிறது. ஆனால் பாஜக கணக்கு வேறு மாதிரி இருந்தது. 'யோகி ஆட்சியின் கீழ் எந்த பாகுபலியும் இல்லை, பஜ்ரங்பலி மட்டும் தான் இருக்கிறார்'', ''உ.பி-யும் யோகியும் இணைந்து இந்த நாட்டுக்கு பல திட்டங்களைக் கொடுக்கிறார்கள்' என்று யோகி புகழ் நாடெங்கும் கேட்டது. இதை மொத்த பாஜக-வும் நாடெங்கும் பரப்பியது.

யோகி புகழ்
ஒரு சமயத்தில் பாஜக-வின் அடுத்த பிரதமர் வேட்பாளர் யோகி என்று சொல்லும் அளவுக்கு யோகி புகழ் இந்தியாவெங்கும் பரப்பப்பட்டது. இந்நிலையில் தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தீர்ப்பு வந்தது. இதை பாஜக-வும் யோகியும் தங்கள் சாதனைகளாக பறைசாற்றின. பிரதமர் மோடி தனிப்பெரும்பான்மையுடன் 2019ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றிருக்காவிட்டால் ராமர் கோவில் சாத்தியமாகி இருக்குமா என்று முன்வைத்து பாஜக நாடெங்கும் பிரசாரத்தை மேற்கொண்டது.

அயோத்தி
"ராமர் கோயில் கட்டுவதற்கான நீண்ட நாள் கனவு நிறைவேறியிருக்கிறது. ராமர் கோயில் கட்ட 500 ஆண்டுகள் காத்திருந்தோம்" அயோத்தியை முன்வைத்து பிரசாரத்தை சென்ற ஆண்டே தொடங்கினார் யோகி ஆதித்யநாத். முதன்முறையாக யோகி இந்தத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். அதற்காக யோகியின் முதல் சாய்ஸ் அயோத்தியாகவே இருந்தது. அதற்கான எல்லா வேலைகளையும் செய்திருந்தார் யோகி. ஆனால், கடைசி நேரத்தில் தன்னுடைய பிறந்த மண்ணாகிய கோரக்பூரையும் ஆதித்யநாத் தேர்வு செய்துள்ளார்.

ராமர் கோயில்
அயோத்தி சங்பரிவாரங்களின் கோட்டை. அயோத்தி-பாபர் மசூதி தீர்ப்புக்குப்பின் பாஜக மேலும் வலுவானது. மேலும், அயோத்தியில் சங்பரிவாரங்களும் வலுவாக காலூன்றியுள்ளன. அதனால் நிச்சயம் யோகி நின்றால் வெற்றி பெறுவார்தான். ஆனாலும் யோகி ஆதித்யநாத் இங்கு போட்டியிடவில்லை. இந்த விஷயமே விமர்சனத்துக்குள்ளானது. ஆனால் இது பெரிதுபடுத்திப் பேசப்படுவதற்குள் பாஜக-வில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.

தேர்தல் களம்
அக்கட்சியில் இருந்து அமைச்சர்கள் உட்பட எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். குறிப்பாக ஒ.பி.சி மற்றும் தலித் சமூகத் தலைவர்கள் பாஜகவை விட்டு வெளியேறி வருகின்றனர். பாஜக மீண்டும் ஆட்சி அமைக்காது என கருதி அவர்கள் விலகுகிறார்களா என்ற கேள்வியை இது எழுப்புகிறது. அமைச்சராக இருந்த ஸ்வாமி பிரசாத் மவுரியாதான் முதன் முதலில் பாஜகவில் இருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பிரஜேஷ் பிரஜாபதி, ரோஷன் லால் வர்மா, பகவதி சாகர் ஆகியோர் ராஜினாமா செய்தனர். பின்னர் நேற்று மற்றொரு அமைச்சர் தாராசிங் சவுகான், அவதார்சிங் பதானா ஆகியோர் பாஜகவை விட்டு வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்.

அகிலேஷ் யாதவ்
அதேசமயம், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, பாஜக-வின் விமர்சனத்துக்கு இடம் கொடுக்காமல் சாமர்த்தியமாக அரசியல் செய்து வருகிறார். ஒ.பி.சி தலைவர்களை கட்சிக்குள் இழுப்பது, குடும்ப கட்சி என்ற நினைப்பை மாற்றுவது, குடும்ப உறுப்பினர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்காதது என பல்வேறு விஷயங்களை ஆழமாக சிந்தித்து செய்துவருகிறார் அகிலேஷ் யாதவ். அவர் குடும்ப உறுப்பினர்கள் பாஜக-வில் இணைந்தபோதும், அதை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டார்.

பிராமணர்கள்
யோகி அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக அது பிராமணர்களுக்கான கட்சி என்ற விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. கோரக்பூர் சம்பவங்களால் யோகி ஆட்சிக்கு பின்னடைவாக இருக்கிறது. யோகியை எதிர்த்து பீம் ஆர்மியின் சந்திர சேகர் போட்டியிடுகிறார். பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவே பாஜக உத்தரப்பிரதேச தேர்தலின் முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. அதில் 44 ஓ.பி.சி,19 தலித் மற்றும் 10 பார்ப்பனர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

பாஜக
சொந்தக் கட்சியினர் வேறு கட்சிக்கு செல்வது, வாக்கு சேகரிக்க செல்லும் பாஜக-வினரை மக்கள் திருப்பி அனுப்புவது, அகிலேஷின் தாக்குதல் என எல்லாவற்றையும் சமாளித்து வருகிறது உத்தரப்பிரதேச பாஜக. இப்போதைக்கு யோகிக்கு இருக்கும் ஒரே ஆறுதல் கருத்துக்கணிப்பு முடிவுகள் தான். யோகி அரசு மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 240 இடங்கள் பெறும் என எதிர்பார்ப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. பாஜகவின் பொற்கால ஆட்சி என்று சொல்லப்படுகின்ற காலத்தில் பாஜக-வின் கோட்டையாக கருதப்படும் உத்தரப்பிரதேசத்தில் பாஜக தடுமாறி வருகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications