லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவினர் நம்மை சூத்திரர்களாகத்தான் பார்க்கிறார்கள்.. உடைத்து.. உணர்ச்சிகரமாக பேசிய அகிலேஷ் யாதவ்

பாஜகவை பொறுத்தவரை நாம் அனைவருமே சூத்திரர்கள்தான் என சமாஜ்வாடி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்து உள்ளார்.

Google Oneindia Tamil News

லக்னோ: பாரதிய ஜனதாவுக்கு நாம் துறவிகளிடமும், பெரியர்களிடம் ஆசீர்வாதம் பெற செல்வது பிரச்சனையாக உள்ளது என்றும், அவர்களின் பார்வையில் நாம் அனைவருமே சூத்திரர்கள்தான் எனவும் சமாஜ்வாடி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்து உள்ளார். லக்னோவில் பாஜக குண்டர்கள் தங்களை தாக்கியதாகவும் அவர் குற்றம்சாட்டி இருக்கிறார்.

உத்தப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள கோம்தி ஆற்றங்கரையோரத்தில் அமைந்து உள்ளது பிரசித்தி பெற்ற மா பீதாம்பரா கோயில்.

இங்கு நடைபெறும் மா பீதாம்பரா 108 மஹாக்யா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சமாஜ்வாடி தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் வருகை தந்தார்.

2,826 பணிகள்.. கைநிறைய சம்பளம்.. 12 முடித்தாலே போதும்..பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட்டில் வேலை!2,826 பணிகள்.. கைநிறைய சம்பளம்.. 12 முடித்தாலே போதும்..பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட்டில் வேலை!

அகிலேஷ் யாதவுக்கு கருப்பு கொடி

அகிலேஷ் யாதவுக்கு கருப்பு கொடி

அப்போது அவருக்கு எதிரான இந்து மகா சபா, ஏபிவிபி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர். அத்துடன் அகிலேஷ் அங்கு வர எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடிகளையும் காட்டியதால் அப்பகுதி பரப்பரப்பு ஏற்பட்டது இருதரப்புக்கு மத்தியில் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

குண்டர்களை வைத்து பாஜக தாக்கியது

குண்டர்களை வைத்து பாஜக தாக்கியது


இதுகுறித்து பேசிய அகிலேஷ் யாதவ், "பாரதிய ஜனதா கட்சி இங்கு குண்டர்களை அனுப்பி வைத்து இருக்கிறது. எந்த மதத்திற்கு பாரதிய ஜனதா ஒன்றும் காண்டிராக்டர் கிடையாது. பாஜகவை சேர்ந்த குண்டர்கள் எங்களை தாக்கினார்கள். இதற்காக முன்கூட்டியே காவல்துறையை நிர்வாகம் அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டது.

சூத்திரர்களாக பார்க்கிறது பாஜக

சூத்திரர்களாக பார்க்கிறது பாஜக

பாஜகவினருக்கும் இதுபோன்ற நிலை ஏற்படலாம் என்பதை மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பாரதிய ஜனதா கட்சியினர் நம் அனைவரையும் சூத்திரர்களாகவே கருதுகிறார்கள். அவர்களின் பார்வையில் நாம் அனைவருமே சூத்திரர்கள்தான். நாம் துறவிகளிடமும், பெரியர்களிடம் ஆசீர்வாதம் பெர செல்வது பாஜகவிற்கு பிரச்சனையாக உள்ளது.

பாஜகவுக்கு வயிற்றெரிச்சல்

பாஜகவுக்கு வயிற்றெரிச்சல்

இன்றுகூட பாஜகவினர் என்னை கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுத்தனர். ஒருவர் கோயிலுக்கு செல்வதை தடுப்பது தவறு. அப்படி தடுத்தபவர்கள்தான் மதத்திற்கு தடையாக உள்ளார்கள். மா பிதாம்பராவை சந்திக்க வருவது பாஜகவினருக்கு வயிற்று எரிச்சலை கொடுத்து உள்ளது. பாஜக இல்லாமல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இல்லை. ஆர்.எஸ்.எஸ். இல்லையென்றால் பாஜக இல்லை.

ஏற்பாட்டாளர்களுக்கு மிரட்டல்

ஏற்பாட்டாளர்களுக்கு மிரட்டல்

என்னை இந்த நிகழ்வில் பங்கேற்க அழைத்த ஏற்பாட்டாளர்களையும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக மிரட்டி இருக்கிறது. பாஜக இங்கு குண்டர்களை அனுப்பி உள்ளது. ஏராளமான குண்டர்கள் இன்னும் இங்கு உலவிக் கொண்டு உள்ளார்கள். நாங்கள் பொதுவுடைமைவாதிகள். குண்டர்களை கண்டு அஞ்சுபவர்கள் அல்ல. தலித்துகளை பாஜக பயன்படுத்திக் கொள்கிறது." என்றார்.

English summary
Samajwadi Party leader and former Uttar Pradesh Chief Minister Akhilesh Yadav has said that we are all Shudras as far as BJP is concerned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X