Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுதான் தமிழை வளர்ப்பதா? காசி - தமிழ் சங்கமம் பேனரில் என்ன அது.. ஒன்னுமே புரியல - நெட்டிசன்ஸ் கலாய்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் தொடங்கி நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் விழாவுக்காக வைக்கப்பட்டு இருக்கும் பதாகையில் தமிழ் எழுத்துக்கள் யாருக்கும் புரியாத வடிவில் அச்சிடப்பட்டு இருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் பெற்று 75 வது ஆண்டை அடைந்து உள்ளதை அமிர்த பெருவிழாவாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

காசி மற்றும் தமிழ்நாடு இடையே உள்ள பண்டைய பண்பாட்டு நாகரீக தொடர்பை வெளிப்படுத்தும் வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இந்த காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, ஒருங்கிணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

பன்முகத் தன்மை

பன்முகத் தன்மை

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி இணைந்து நடத்தும் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கடந்த நவம்பர் 17 ஆம் தேதி தொடங்கியது. வாரணாசி மக்களவைத் தொகுதி உறுப்பினரான பிரதமர் நரேந்திர மோடி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றினார். இதில் இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டிலிருந்து பயணம்

தமிழ்நாட்டிலிருந்து பயணம்

நாட்டின் கலாச்சார நகரங்களின் பன்முகத் தன்மை மற்றும் கல்வி சார்ந்த உரையாடல்கள், கருத்தரங்குகள் மற்றும் விவாதங்களை இந்த சங்கமம் நிகழ்ச்சியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆசிரியர்கள், மாணவர்கள், ஆன்மீகவாதிகள், விவசாயிகள் என பலர் சென்று வருகின்றனர்.

சிறப்பு ரயில்கள்

சிறப்பு ரயில்கள்

இதற்காக தமிழகத்திலிருந்து காசிக்கு 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றனர். இந்த சிறப்பு ரயில்களில் 2,592 பேர் பயணம் மேற்கொண்டனர். இந்த காசி தமிழ் சங்கமத்தில் தமிழ்நாடு பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். அங்கு சென்றவர்கள் இந்த சங்கமம் சிறப்பாக இருந்ததாகவும், தமிழர்களுக்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டு உபசரிப்பு செய்ததாகவும் பாராட்டி வருகின்றனர்.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

அதே நேரம் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மதபிரச்சார நிகழ்ச்சியை போன்று இருப்பதாகவும், சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி என்றும் பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக திமுக, திராவிட இயக்கங்கள், இடதுசாரி கட்சிகள் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்டு வருவதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

பேனர் சர்ச்சை

பேனர் சர்ச்சை

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு சென்று இருக்கும் தமிழர்களை வரவேற்க அங்கு பல்வேறு இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளையின் சார்பில் தமிழர்களை வரவேற்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மொழிகளில் பேனர் வைக்கப்பட்டு இருக்கிறது.

பிழையான தமிழ்

பிழையான தமிழ்

காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள பரிசு பொருள் மையத்தில் "அனைத்து விருந்தினர்களின் வரவேற்கிறது" என்று பிழையான வாக்கிய அமைப்புடன் கூடிய தமிழில் பேனர் வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் "காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளை, பரிசு பொருள் மையம்" போன்றவை தமிழில் தவறாக அச்சிடப்பட்டு இருக்கின்றன.

என்ன எழுத்து?

என்ன எழுத்து?

இவை தமிழ் எழுத்துக்கள்போன்றே இல்லாமல் எழுத்துக்களின் வடிவமே தவறாக இருக்கிறது. கணினியில் தமிழ் தட்டச்சு செய்யும்போது முறையான வடிவமைப்பில் வராததை கவனிக்காமல் அப்படியே அச்சிட்டு வைத்து இருக்கிறார்கள். இந்த பேனரின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+