வேற லெவலில் மாறும் உ.பி பள்ளி கல்வித்துறை.. 3 மாதங்களுக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்த யோகி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கல்வியை மேம்படுத்த யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ரூ.750 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த தொகையை கொண்டு அடுத்த மூன்று மாதங்களில் மாநிலத்தின் அரசு பள்ளிகள் மேம்படுத்தப்படும்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யோகி ஆதித்யநாத்தின் 6 ஆண்டுகால ஆட்சியை அம்மாநில அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் இம்மாநிலத்தில் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்ததில்லை. ஆனால் யோகி ஆதித்நாத் 6 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சராக பதவி வகித்து புதிய சாதனையை படைத்திருக்கிறார். எனவே இந்த சாதனையை கொண்டாடும் வகையில் புதிய திட்டங்களை மாநில அரசு அறிவித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாகதான் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்த ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபப்பட்டுள்ளது. இதற்கான கோப்புகளில் முதலமைச்சர் யோகி கையெழுத்திட்டுள்ளார். எனவே உடனடியாக பணம் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்களுக்கு சென்று சேரும். இது குறித்து யோகி ஆதித்யநாத் கூறியதாவது, "உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சி இப்போது சர்வதேச அளவில் இருக்கிறது. நாம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.
இதற்கால பல்வேறு பணிகள் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு கூட இந்த நோக்கத்திற்காகதான் நடத்தப்பட்டது. இந்த மாநாடு மூலம் நமது மாநிலத்தில் ரூ.35 லட்சம் கோயில் முதலீடு உருவாகும். இந்த முதலீடுகள் உருவாக வேண்டும் எனில் மாநிலத்தின் உட்கட்டமைப்பு தலைகீழாக மாற்றம் பெற வேண்டும். எனவே சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கூடுதல் நிதியை ஒதுக்கியிருக்கிறோம்.
இந்த நிதியை கொண்டு கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு, இன்டர்நெட் என 10 முக்கிய துறைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த திட்டமிடலின் ஒரு அங்கமாக கல்விக்கு தற்போது ரூ.750 கோடி நிதியுதவி செய்யப்பட்டுள்ளது. நமது மாநிலத்தின் 75 மாவட்டங்களில் உள்ள 1,13,249 பள்ளிகளில் 81 பள்ளிகள் சொந்த கட்டிடங்கள் இன்றி இயங்கி வருகிறது. அதேபோல 547 பள்ளிகளில் கழிப்பறைகளும், 37,237 பள்ளிளில் சுற்றுச்சுவர் கிடையாது. எனவு இந்த பிரச்னைகளை சரிசெய்திடதான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளத.
அடுத்த 3 மாதங்களில் இந்த நிதி முழுமையாக பயன்படுத்தப்பட்டு பள்ளிகள் மேம்படுத்தப்படும். இதனால் மாநிலத்தின் கல்வி மற்றும் மாணவர்களின் தரம் மேலும் அதிகரிக்கும்" என்று யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் இந்த நிதியை பிரித்து பார்த்தால் ஒவ்வொரு பள்ளிக்கும் சராசரியாக ரூ.5.5 லட்சம்தான் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கப்பள்ளியில் ரூ.20 கோடிக்குமேல் செலவுகள் இருக்கின்றன. அதேபோல நடுநிலை பள்ளிகளுக்கு ரூ.600 கோடிக்கு செலவுகள் இருக்கினற்ன என கணிக்கப்பட்டுள்ளத என்பத குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications