லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிபிஇ கிட் அணிந்து ஆற்றில் சடலத்தை வீசிய கொடூரர்கள். இரண்டு பேரை கைது செய்தது உ.பி. போலீஸ்!

Google Oneindia Tamil News

லக்னோ : பிபிஇ கிட் உடை அணிந்து வந்து கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஆற்றில் வீசிய இரண்டு பேரை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்துள்ளது. முன்னதாக உத்தரப்பிரதேச மாநிலம் பால்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ராப்தி ஆற்றில், இறந்து போனவரின் உடலை மனித தன்மையே இல்லாமல் தூக்கி வீசிய வீடியோ வைரல் ஆனது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Two arrested after video of man in PPE kit throwing body into river in UP surfaces

பூக்களையும், தவாரங்களையும் மிதந்து சென்ற கங்கை ஆறு, பிணத்தின் குவியலை சுமந்து செல்லும் கொடூரமான நிலையை சந்தித்தது. கொரோனாவால் இறந்த ஆயிரக்கணக்கானவர்களின் உடல்கள் கங்கை ஆற்றில் மிதந்ததை கண்டு உலகமே அதிர்ச்சி உடன் பார்த்தது. இதையடுத்து மத்திய அரசு ஆற்றில் இறந்தவர்களின் சடலத்தை போடாமல் கண்காணிக்குமாறு மாநிலங்களுக்கு உத்தரவிட்டது.

கொரோனா பாதிப்பு குறைந்ததால் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் பிரச்சனைகள் இல்லை. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்த நோயாளி ஒருவரின் சடலம் ஆற்றில் வீசப்பட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையதளங்களில் வெளியானது, இதை பார்த்து பலரும் கொதித்து போனார்கள்.

இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் பால்ராம்பூர் மாவட்டத்தில் கடந்த மே 28ஆம் தேதி நடந்திருக்கிறது. அதில் பிபிஇ கிட் அணிந்த ஒருவரும். சாதாரண உடையில் ஒருவரும் உயிரிழந்தவரின் உடலை நதியில் தூக்கி வீசுகின்றனர். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வீடியோவை பகிர்ந்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்திற்கு கேள்விகள் எழுப்பினர்,.

தஞ்சை மருத்துமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைத்து கொடுத்த துபாய் தொழில் அதிபர்! தஞ்சை மருத்துமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைத்து கொடுத்த துபாய் தொழில் அதிபர்!

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையில், கொரோனாவால் உயிரிழந்தார் என்றும் அவரது உறவினர்களே சடலத்தை நதியில் தூக்கி வீசினர் என்றும் பால்ராம்பூர் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், அந்த நபர் பெயர் பிரேம்நாத். அவர் கடந்த மே 25ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மே 29இல் உயிரிழந்தார் இதையடுத்து கொரோனா வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் தான் சடலத்தை நதியில் தூக்கி வீசியுள்ளனர். இது குறித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இந்த வீடியோ வைரலானைத் தொடர்ந்து சஞ்சய் குமார், மனோஜ் குமார் என இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்,

English summary
wo people have been arrested by the police after a video surfaced of a body being thrown into Rapti river in Uttar Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X