லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரூ.2000 கோடி முதலீடு! உத்தரப் பிரதேசத்தில் மாஸாக தொடங்கப்பட்ட லூலூ ஷாப்பிங் மால்! இத்தனை வசதிகளா

Google Oneindia Tamil News

லக்னோ: இந்தியாவிலேயே மிகப் பெரிய சூப்பர் மார்கெட்களில் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் திறக்கப்பட்டு உள்ளது.

அபுதாபியைச் சேர்ந்த யூசுப் அலி லூலூ நிறுவனம் அதன் பிரம்மாண்டமான சூப்பர் மார்கெட்டுகளுக்கு பெயர் பெற்றது. ஐக்கிய அமீரகத்தில் பல்வேறு நகரங்களிலும் லூலூ சூப்பர் மார்கெட்கள் உள்ளன.

கச்சத்தீவு அருகே 6 தமிழக மீனவர்கள் கைது..இலங்கை கடற்படை அட்டூழியம் கச்சத்தீவு அருகே 6 தமிழக மீனவர்கள் கைது..இலங்கை கடற்படை அட்டூழியம்

இந்தியாவிலும் கூட பல ஆண்டுகளாகவே லூலூ சூப்பர் மார்க்கெட்கள் செயல்பட்டு வருகிறது. கொச்சி, பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் சூப்பர் மால்கள் உள்ளன.

 லூலூ மால்

லூலூ மால்

வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் முதல் உணவு பதப்படுத்துதல், ரியல் எஸ்டேட் மற்றும் நிதி சேவைகள் வரை கிட்டத்தட்ட அனைத்து வகையான சேவைகளையும் நாம் இந்த லூலூ மால்களில் பெறலாம். இத்தனை நாட்கள் பெங்களூர், கொச்சி எனத் தென் இந்திய நகரங்களில் மட்டுமே செயல்பட்டு வந்த லூலூ சூப்பர் மார்க்கெட் இப்போது முதல்முறையாக வட இந்தியா பக்கம் சென்றுள்ளது.

 லக்னோ

லக்னோ

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் லூலூ சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டு உள்ளது. பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் இந்த மிகப் பெரிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கும். கடந்த 2019இல் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதலில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் பின்னர் மால் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், இந்த மால் இப்போது திறக்கப்பட்டு உள்ளது.

 வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இதன் மூலம் உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.2000 கோடி முதலீடு கிடைத்துள்ளது. இந்த சூப்பர் மார்கெட் சுமார் 22 லட்சம் சதுர அடி பரப்பளவைக் கொண்டது. இதன் மூலம் நேரடியாக 4,800 பேரும், மறைமுகமாக சுமார் 10,0000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. அதேபோல கிரேட்டர் நொய்டாவில் உணவு மற்றும் காய்கறி பதப்படுத்தும் பிரிவையும் லூலூ நிறுவனம் நிறுவ உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலமும் அங்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

 வசதிகள்

வசதிகள்

இந்த மாலில் 15 உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் உள்ளன. மேலும் 25 பிராண்ட் தங்கள் சிறப்பு ஸ்டோர்களை தொடங்கி உள்ளன. 1,600 பேர் அமரக்கூடிய மெகா ஃபுட் கோர்ட்டும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் 3,000 வாகனங்கள் நிறுத்தும் வகையில் பிரத்தியேக 11 மாடி பார்க்கிங் வசதி 7 லட்சம் சதுர அடியில் உள்ளது. 11-திரை கொண்ட PVR சூப்பர்ப்ளக்ஸும் விரைவில் திறக்கப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.

 அண்ணாமலை

அண்ணாமலை

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் 3500 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. சென்னை மற்றும் கோவையில் சூப்பர் மார்கெட்கள் திறக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த லூலூ மால்கள் காரணமாக சிறு குறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் லூலூ மால்களை அனுமதிக்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருந்தார். இப்போது பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்திலேயே லூலூ மால் திறக்கப்பட்டு உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

 யூசுப் அலி

யூசுப் அலி

கடந்த 1973ஆண் ஆண்டு அபுதாபி சென்ற யூசுப் அலி EMKE குழுமத்தில் சேர்ந்தார். 2000ஆம் ஆண்டில் முதல்முறையாக லூலூ ஹைப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டது. இப்போது மத்திய கிழக்கு, ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் 22 நாடுகளில் செயல்படுகிறது. மொத்தம் 235 சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளன. இந்தியாவில் லூலூ க்ரூப் இந்தியா என்ற நிறுவனத்தின் மூலம் நிறுவனங்களை நடத்தி வருகிறது. இந்தியா பிரதமரின் சர்வதேச ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் யூசுப் அலி 2008-2014 வரையிலான காலகட்டத்தில் இருந்துள்ளார்

English summary
First Lulu Mall in North India set up in Lucknow: (லக்னோவில் இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் மார்கெட்களில் ஒன்றான லூலூ மால் திறப்பு) Lulu Mall latest in India updates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X