Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உ.பி: 3-ம் கட்ட தேர்தலில் பாஜகவுக்கு ஆகப் பெரும் சவாலாக இருக்கும் ஹத்ராஸ் பலாத்கார சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3-ம் கட்டமாக வரும் 20-ந் தேதி நடைபெறும் தேர்தலில் பாஜகவுக்கு ஹத்ராஸ் பலாத்கார சம்பவம் பெரும் சவாலாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3-வது கட்டமாக வரும் 20-ந் தேதி மொத்தம் 59 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 16 மாவட்டங்களில் இந்த 59 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

யாதவ்கள் அதிகம் உள்ள தொகுதிகள்

யாதவ்கள் அதிகம் உள்ள தொகுதிகள்

3-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 16 மாவட்டங்களில் 9-ல் அகிலேஷின் யாதவ் ஜாதியினர் பெரும்பான்மையினராக உள்ளனர். வாசனை திரவிய வியாபாரிகள் ஐடி சோதனை, அமலாக்கப் பிரிவு சோதனை என எதிர்கொண்ட கன்னோஜ் தொகுதியில் 3-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

ஹத்ராஸ் சம்பவம்

ஹத்ராஸ் சம்பவம்

இந்த 3-ம் கட்ட வாக்குப் பதிவுக்கான பிரசாரத்தில் உ.பி.யின் சட்டம் ஒழுங்கு விவகாரத்தை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் எழுப்பி வருகிறார். குறிப்பாக 2020-ம் ஆண்டு நாட்டையே உலுக்கிய ஹத்ராஸ் பலாத்கார சம்பவம் குறித்து இடைவிடாமல் பிரசாரம் செய்கிறார் அகிலேஷ். 2020-ம் ஆண்டு பழங்குடி இளம் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது. இதனால் அப்பெண் மரணம் அடைந்தார். போலீசார் பெற்றோர், உறவினர்களுக்கு அனுமதி தராமல் தாங்களே அந்த இளம்பெண்ணின் உடலையும் எரித்தனர். இச்சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உ.பி.யில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு மோசமாக இருக்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வதற்கு இந்த ஒரு சம்பவம் முக்கிய காரணமாக இருந்தது.

பதிலடி தரும் யோகி

பதிலடி தரும் யோகி

அகிலேஷ் யாதவ் தமது தேர்தல் பிரசாரத்தில் ஹத்ராஸ் பலாத்கார சம்பவம், கன்னோஜ் ஐடி ரெய்டு ஆகியவற்றை முன்வைக்கிறார். இதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பதிலடி கொடுத்து வருகிறார். இது தொடர்பாக யோகி ஆதித்யநாத் கூறுகையில், சமாஜ்வாதி ஆட்சிக் காலத்தில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்தது; நில அபகரிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. மாஃபியாக்கள் சுதந்திரமாக நடமாடினர். இத்தனையையும் பாஜக ஆட்சிதான் ஒழித்து கட்டியது என்றார்.

உருளைகிழங்கு விவகாரம்

உருளைகிழங்கு விவகாரம்

உ.பி.யில் குற்றச் செயல்கள் அதிகம் நிகழக் கூடிய மாவட்டங்களான ஜான்சி, லலித்பூர், ஹமிர்பூர், மஹோபா ஆகியவை வரும் 20-ந் தேதி 3-ம் கட்ட தேர்தலை எதிர்கொள்கின்றன. 3-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் மாவட்டங்களில் உருளைக்கிழங்கு சாகுபடிதான் பிரதானம். உ.பி. உருளை கிழங்குகளை வாங்கப் போவது இல்லை என தெலுங்கானா அரசு அறிவித்திருந்தது. தெலுங்கானா அரசுடன் யோகி அரசு பேச்சுவார்த்தை நடத்தாமல் இருந்ததை அகிலேஷ் விமர்சித்து வருகிறார். ஆகையால் உருளைக்கிழங்கு விவகாரமும் 3-ம் கட்ட தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+