உ.பி.: பாஜகவுக்கு புது குடைச்சல்! ஆர்.பி.ஐ. க்கு 10 சீட் கேட்கும் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இந்திய குடியரசு கட்சிக்கு 10 சீட்டுகள் கொடுக்க வேண்டும் என்று திடீரென மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. உ.பி.யில் நாட்டிலேயே அதிக சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் 403 தொகுதிகள் உள்ளன.

உத்தரபிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டுகிறது. ஆனால் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளோ நிபந்தனைகளுக்கு மேல் நிபந்தனைகள் வைத்து அந்த கட்சியை விழிபிதுங்க வைக்கின்றனர்.

பீகார் விஐபி கட்சி

பீகார் விஐபி கட்சி

பீகாரில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள வி.ஐ.பி. கட்சி, உ.பி. தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஆனால் பா.ஜ.க.வுடனான கூட்டணியா? இல்லையா? என்பதை பின்னர் சொல்வோம் என மதில்மேல் பூனையாக நிற்கிறது.

160 சீட் கேட்கும் நிஷாத் கட்சி

160 சீட் கேட்கும் நிஷாத் கட்சி

உ.பி.யில் பா.ஜ.க. அணியில் இருக்கும் நிஷாத் கட்சி என்கிற மீனவர்கள் கட்சியோ, 160 சீட்டுகள், துணை முதல்வர் பதவி, ராஜ்யசபா சீட் என நிபந்தனைகளை அடுக்கிக் கொண்டே போகிறது. அத்துடன் எங்களுக்கு கேட்டது கிடைக்காமல் போனால் பா.ஜ.க.வால் நிம்மதியாக இருக்க முடியாது எனவும் மிரட்டல் விடுத்திருக்கிறது.

முதல்வர் வேட்பாளர் யார்?

முதல்வர் வேட்பாளர் யார்?

ஏற்கனவே முதல்வர் யோகி ஆதித்யநாத் மீதான அதிருப்தியை சமாளிக்க படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக தம்மையே அறிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க.வின் சீனியர்கள் ஆளுக்கொரு பக்கம் கொடிபிடித்து கொண்டிருக்கிறார்கள். இந்த பஞ்சாயத்துகளுக்கு மத்தியில்தான் கூட்டணி கட்சிகள் பா.ஜ.க.வை மிரட்டிக் கொண்டிருக்கின்றன.

10 சீட் கேட்கும் அத்வாலே

10 சீட் கேட்கும் அத்வாலே

இந்த நிலையில் புதிய குடைச்சலை கையில் எடுத்திருக்கிறார் மத்திய அமைச்சரும் இந்திய குடியரசு கட்சித் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே. உ.பி. தேர்தலில் தங்களது கட்சியும் போட்டியிட உள்ளது; தங்களுக்கு 8 முதல் 10 சீட்டுகள் வரை தர வேண்டும்; இந்த குறைவான எண்ணிக்கையை நிச்சயம் பா.ஜ.க. தரும் என புதிர்போட்டு பேசியிருக்கிறார் ராம்தாஸ் அத்வாலே.

கூட்டணிகள் நிலை

கூட்டணிகள் நிலை


உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஓவைசியின் மஜ்ஸ்லிஸ் கட்சி, ஏற்கனவே உருவான 12 சிறு கட்சிகளின் மெகா கூட்டணியில் இடம்பெறுவதாக அறிவித்திருக்கிறது. மேலும் உ.பி.யில் 100 தொகுதிகளில் போட்டியிடுவோம் எனவும் ஓவைசி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+