சாமானிய மக்களுக்கும் அதிகாரம் என்பதே இலக்கு! உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி
லக்னோ: "சாமானிய மக்களுக்கும் அதிகாரம் அளிப்பதே பாஜகவின் நோக்கம்" என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யோகியின் 6 ஆண்டு ஆட்சியை அம்மாநில அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. காரணம், இதற்கு முன்னர் இம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்கள் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் நீடிக்கவில்லை. அந்த வகையில் யோகி ஆதித்யநாத் புதிய சாதனையை படைத்திருக்கிறார். என இந்த 6 ஆண்டுகளில் யோகி ஆதித்யநாத் அறிவித்த திட்டங்கள் குறித்து பாஜக அரசு மக்கள் மத்தியில் சாதனை விளக்க கூட்டங்களை நடத்தி வருகிறது.

இது குறித்து பேசிய யோகி ஆதித்யநாத், "மக்களுக்கு அதிகாரம் அளிப்பதே பாஜகவின் நோக்கம். எதிர்கட்சிகளை போல பாஜக ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது" என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், "2017க்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தில் மாஃபியாக்களின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. அவர்களுடன் அப்போதைய அரசாங்கம், அதாவது தற்போதைய எதிர்க்கட்சிகள் சமர பாதையை பின்பற்றின.
இதே போக்கு மக்களின் நலனிலும் ஏற்பட்டது. தற்போதைய எதிர்க்கட்சியினர் மக்கள் நலனில் கூட சமரசம் செய்துகொண்டனர். ஆனால் பாஜக எதிர் திசையில் இயங்கியது. நாங்கள் ஒருபோதும் எதிலும் சமரசம் செய்துகொள்ளவில்லை. இதனால்தான் மக்கள் இரண்டாவது முறையாக எங்களை தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.
நாங்கள் இந்த மாநிலத்திற்காக ஆற்றியுள்ள பங்கு அளப்பரியது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ் உத்தரப் பிரதேசம் சீரான வளர்ச்சியை கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் துப்பாக்கிகளுடன் திரிந்த இம்மாநில இளைஞர்கள் தற்போது டேப்லெட்களுன் கல்வியை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கின்றனர். இன்று உத்தரப் பிரதேசத்தில் எல்லாம் சரியாக இருக்கிறது. குடிநீர், மின்சாரம், அடிப்படை வசதிகள் என அனைத்தும் சரியாக செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications