லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெலிட் பண்ணு.. இஸ்லாமியர் பற்றி ரிப்போர்ட்டர் கேள்வி.. மைக்கை வீசி எறிந்து.. சீறிய உபி துணை முதல்வர்

Google Oneindia Tamil News

லக்னோ: இஸ்லாமியர்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து உ.பி துணை முதல்வர் நேர்காணல் ஒன்றில் இருந்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா பிபிசி ரிப்போர்டர் ஒருவரிடம் இதற்காக சண்டை போட்டது விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இந்து அமைப்புகள், வலதுசாரி அமைப்புகள் சேர்ந்து நடத்திய மத கூட்டம் ஒன்று சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் "தர்ம பாராளுமன்றம்" என்று பொருள் கொள்ளும் வகையில் 'Dharma Sansad' என்ற கூட்டம் நடத்தப்பட்டது. இதில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்துக்கள் இப்போதே ஆயுதம் தூக்க வேண்டும். நாம்தான் தாக்க வேண்டும். கொல்ல வேண்டும். இல்லையென்றால் நாம் கொல்லப்படுவோம் என்று இஸ்லாமியர்களுக்கு எதிராக மிக கடுமையான கருத்துக்கள் இதில் வைக்கப்பட்டது.இஸ்லாமியர்களுக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு எதிராக ஏற்கனவே ஹரித்வார் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

இந்த நாள்...கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு வேற மாதிரி வரும்...சிம்புவை பங்கம் பண்ணும் நெட்டிசன்கள் இந்த நாள்...கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு வேற மாதிரி வரும்...சிம்புவை பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்

 இஸ்லாமியர் கூட்டம்

இஸ்லாமியர் கூட்டம்

இந்த கூட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு உத்தர பிரதேச துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா பதில் அளிக்க மறுத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உ.பி தேர்தலை முன்னிட்டு பிபிசி ரிப்போர்ட்டர் ஒருவர் நடத்திய நேர்காணலில்.. ஹரித்வாரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கூட்டம் நடைபெற்று இருக்கிறது. இதில் இன அழிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. இதற்காக உறுதிமொழியும் எடுத்துள்ளனர். இஸ்லாமியர்களை அச்சத்திற்கு உள்ளாக்கும் இந்த கூட்டத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அந்த ரிப்போர்ட்டர் கேட்டார்.

 உத்தர பிரதேச துணை முதல்வர்

உத்தர பிரதேச துணை முதல்வர்

இந்த கேள்வியை எதிர்கொண்டதும் கோபம் அடைந்த உத்தர பிரதேச துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா. அப்படி எதுவும் சம்பவம் நடக்கவில்லை. இதெல்லாம் பொய்யான செய்தி என்று குறிப்பிட்டார். இதையடுத்து அந்த செய்தியாளர்.. அந்த கூட்டம் நடந்ததற்கான ஆதாரம் இருக்கிறது. வீடியோ என்னிடம் உள்ளது. நீங்கள் பார்க்க விரும்பினால் நான் காட்டுகிறேன் என்று குறிப்பிட்டார்.

கோபம்

கோபம்

அதற்கு கோபம் அடைந்த உத்தர பிரதேச துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா, நீங்கள் அரசியல் பற்றி கேள்வி கேளுங்கள். இதை பற்றி கேட்க கூடாது. தேர்தல் பற்றி கேளுங்கள். நீங்கள் ஒரு பத்திரிக்கையாளர் போல பேசவில்லை. நீங்கள் எதோ ஏஜென்ட் போல பேசுகிறீர்கள். நீங்கள் பேசுவது எதோ உள்நோக்கத்தோடு இருப்பது போல தோன்றுகிறது. என்று கூறினார்.

 உத்தர பிரதேச துணை முதல்வர்

உத்தர பிரதேச துணை முதல்வர்

அதன்பின் சில நொடிகள் யோசித்தவர் , திடீரென கோபம் அடைந்து, தனது மைக்கை தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து பாதியில் வெளியேறினார். உங்களுக்கு இன்டர்வியூ கொடுக்க முடியாது நீங்கள் கிளம்புங்கள்.. நீங்கள் உள்நோக்கத்தோடு பேசுகிறீர்கள் என்றார். அதோடு இல்லாமல் உத்தர பிரதேச துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா அந்த நேர்காணலின் வீடியோவை கட்டாயப்படுத்தி டெலிட் செய்ய சொல்லி இருக்கிறார்.

 வீடியோ டெலிட்

வீடியோ டெலிட்

உடனே அந்த வீடியோவை டெலிட் பண்ணு என்று கட்டாயப்படுத்தி மிரட்டல் இருக்கிறார். இதையடுத்து அந்த வீடியோ அங்கேயே டெலிட் செய்யப்பட்டது. ஆனாலும் ரெக்கவரி செயலிகள் மூலம் அந்த வீடியோவை மீட்ட பிபிசி இந்தி சேனல் அதை தனது யூ டியூப் பக்கத்தில் பதிவேற்றி உள்ளது. உத்தர பிரதேச துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியாவின் இந்த செயல் இணையம் முழுக்க விமர்சனங்களை சந்தித்துள்ளது.

English summary
UP Deputy CM Keshav Prasad Maurya stops the interview after the journalist asks questions on Haridwar Dharam Sansad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X