குண்டர்களின் கூடாரமான சமாஜ்வாதி கட்சி! உத்தரப்பிரதேசத்தில் அமித்ஷா அனல்பறக்கும் பிரசாரம்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் உள்ள மொத்த மாபியா குண்டர்களும் சமாஜ்வாதி கட்சியில் இருக்கிறார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா என ஐந்து மாநிலங்களுக்கு மிகவிரைவில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்கான தேர்தல் வேலைகளை மும்முரமாக செய்யத்துவங்கிவிட்டன அரசியல் கட்சிகள்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் முதற்கட்ட தேர்தல் வரும் 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதற்கான முடிவுகள் மார்ச் 10ம் தேதி அறிவிக்கப்படவுள்ளன.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக, சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் நான்கு முனை போட்டியை உருவாக்கியுள்ளன. ஆனால் கடந்த முறை ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சிக்கும் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக-வுக்கும் தான் நேரடி போட்டி நிலவுகிறது. கருத்துக்கணிப்புகள் பாஜக தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன.

பாஜக
இந்நிலையில், பாஜக தீவிர பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. ஒபிசி தலைவர்கள் சமாஜ்வாதி கட்சிக்குத் தாவினாலும், தேர்தலில் தங்கள் பலத்தை நிரூபிக்கத் தயாராகிவருகின்றனர். முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது சொந்த தொகுதியில் போட்டியிடுகிறார். முப்பதுக்கும் அதிகமான ஸ்டார் பேச்சாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அமித்ஷா
பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பிரசாரம் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேச தேர்தல் இந்தியாவின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் என்று பிரசாரம் செய்தார். அதோடு மாநிலத்தின் வளர்ச்சி குறித்தும், மீண்டும் ராமர் கோயில் கட்டியதற்கு பிரமர் மோடியும் பாஜகவும் தான் காரணம் என்று பிரசாரங்களில் பேசி வருகிறார்.

பிரசாரம்
அதேநேரத்தில் பாஜக-வுக்கு போட்டி கொடுக்கும் சமாஜ்வாதி கட்சியைத் தாக்கியும் தொடர்ந்து பேசி வருகிறார் அமித்ஷா. அலிகார்க் மாவட்டம் அட்ரவுலியில் நடந்த கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில் ''அசம் கான், அதிக் அகமது, முக்தர் அன்சாரி ஆகியோர் இப்போது சிறையில் உள்ளனர். ஒருவேளை உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களித்தால் சிறையில் உள்ளவர்கள் வெளியே வந்துவிடுவார்கள் என்றார்.

மாபியா
உத்தரப்பிரதேசத்தில் மாபியாக்களை தேடினால், அவர்கள் 3 இடங்களில் இருப்பார்கள். சிறைச்சாலையில், உத்தரப்பிரதேசத்துக்கு வெளியே மற்றும் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இருப்பார்கள். மாயாவதி மற்றும் அகிலேஷ் ஆட்சி காலத்தில் குண்டர்கள் மக்களை துன்புறுத்தினார்கள். சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகியவற்றின் ஆட்சி காலத்தில் உத்தரபிரதேச மாநிலம் மிகவும் பின்தங்கிவிட்டது'' என சமாஜ்வாதி கட்சியைத் தொடர்ந்து தாக்கிப் பேசி வருகிறார் அமித்ஷா.












Click it and Unblock the Notifications