லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

18 பேர் இறப்புக்கு போராட்டக்காரர்கள்தான் காரணம்.. ஒரு புல்லட்டைகூட நாங்கள் சுடவில்லை.. உ.பி. போலீஸ்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வன்முறையின் போது 18 பேர் இறந்ததற்கு பொறுப்பு போராட்டக்காரக்கள்தான் என்றும் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதும் அவர்கள்தான் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதில் உத்தரப்பிரதேசம், டெல்லியில் வன்முறையில் வெடித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் காஸியாபாத், அம்ரோஹா, ஃபரூகாபாத், புலந்த்சாகர், முஸாபர்நகர் உள்பட பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் மாநிலத்தில் 18 பேர் பலியாகிவிட்டனர். வாரணாசியில் ஒரு வன்முறை கும்பலை காவல் துறையினர் விரட்டிச் சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 8 வயது சிறுவன் பலியாகிவிட்டான்.

இறைச்சி சாப்பிடுபவர்கள் கொலையாளிகள்.. டிவிட்டரில் வகை வகையாக ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்ஸ்! இறைச்சி சாப்பிடுபவர்கள் கொலையாளிகள்.. டிவிட்டரில் வகை வகையாக ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்ஸ்!

புல்லட்

புல்லட்

கடந்த வியாழக்கிழமை முதல் 18 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டை தாங்கள் நடத்தவில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில் ஒரு புல்லட்டை கூட நாங்கள் பயன்படுத்தவில்லை.

துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு

இதில் நாங்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறோம். எங்களது துப்பாக்கிச் சூட்டால் யாரேனும் இறந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.

வன்முறை

வன்முறை

போராட்டக்காரர்கள் போலீஸாரை நோக்கி சுட்ட போதில் அதில் அவர்களில் சிலர் பலியாகிவிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விட வெளியில் வந்தவர்களே வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியப்படுவர்.

405 காலி தோட்டாக்கள்

405 காலி தோட்டாக்கள்

பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம் இருந்து இழப்பீட்டை எப்படி பெறுவது என்பது குறித்து போலீஸ் சட்டரீதியாக ஆலோசனை நடத்தி வருகிறது. இது வரை வன்முறை நடந்த இடங்களில் இருந்து 405 காலி புல்லட்களை கைப்பற்றியுள்ளோம்.

 தோட்டாக்கள்

தோட்டாக்கள்

இறந்த 18 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையும் இறந்தவர்கள் உடலில் நாட்டுத் துப்பாக்கி குண்டு துளைத்ததால் அவர்கள் இறந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. சனிக்கிழமை மட்டும் போராட்டக்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 1000 முறை தோட்டாக்கள் வெடித்தன என்று போலீஸார் தெரிவித்தனர்.

English summary
Uttar Pradesh says protesters were responsible for the deaths behind 18 deaths. The firing was not done by police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X