உ.பி. தேர்தல்: 300 இடங்களுக்கு மேல் வெல்வோம்.. முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
403 சட்டசபை தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் கடந்த 10 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இன்றைய தினம் 5 ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதுவரை 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுவிட்டது. இந்த நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பலியாவில் கூறுகையில் 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் என்னால் ஒரு விஷயத்தை உறுதியாக சொல்ல முடியும். உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு சாதகமான அலை வீசி வருகிறது.
இதனால் இந்த தேர்தலில் பாஜக நிச்சயம் தனிபெரும்பான்மையை பெறும். ஏற்கெனவே 2017ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கு மேல் வென்று ஆட்சியை பிடித்தது. அதே போல் இந்த முறையும் 300 தொகுதிகளுக்கு மேல் இமாலய வெற்றி பெறும் என்றார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டார். இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சியும் மாநில கட்சி என்பதால் இந்த தேர்தலில் எப்படி ஆட்சியை பிடித்து விட வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது.
தேர்தல் கருத்து கணிப்புகள் உ.பியில் பாஜகதான் வெல்லும் என சொல்லியுள்ள நிலையில் உ.பி.யில் ஆட்சி மாற்றம் நிகழுமா இல்லை பாஜக ஆட்சியே தொடருமா என்பது மார்ச் 10 ஆம் தேதி தெரியவரும்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications