‛‛அல்லா ஹூ அக்பர்’’.. குடியரசு தினவிழாவில் அலிகார் பல்கலையில் மாணவர்கள் திடீர் கோஷம்! பரபர வீடியோ!
உத்தர பிரதேசம் மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் குடியரசு தினவிழாவில் என்சிசி உடையில் மாணவர்கள் மதம்சார்ந்த கோஷமிட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளது. கடந்த 26ம் தேதி குடியரசு தினவிழாவின்போது இங்கு தேசியக்கொடி ஏற்றப்பட்டபோது என்சிசி உடை அணிந்திருந்த மாணவர்கள் திடீரென்று ‛அல்லா ஹூ அக்பர்' என கோஷமிட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் தான் பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை கையில் எடுத்து செயல்படுத்தி உள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த 26ம் தேதி குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு தேசியக்கொடி ஏற்றினார். ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆளுநர் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.
இதேபோல் பள்ளி, கல்லூரிகளிலும் தேசியக்கொடி ஏற்றி குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பல பள்ளி ,கல்லூரிகளில் தேசியக்கொடி ஏற்றிய பிறகு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அல்லா ஹூ அக்பர் கோஷம்
இதேபோல் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலும் குடியரசு தினவிழா கொண்டாட்டம் நடந்தது. இந்த வேளையில் என்சிசி உடையணிந்திருந்த மாணவர்கள் சிலர் ‛அல்லா ஹூ அக்பர்' என கோஷமிட்டனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகின. இது சர்ச்சையை கிளப்பியது.

அதிரடி விசாரணை
மேலும் இது விவாதத்தை கிளப்பியது. இதையடுத்து உடனடியாக அலிகார் போலீசார் பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு பேசினர்.. இதையடுத்து சுதாரித்த கொண்ட பல்கலைக்கழக நிர்வாகம் உடனே விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் வீடியோவில் இருக்கும் மாணவர்களை பிடித்து விசாரணை துவங்கப்பட்டது.

சஸ்பெண்ட் உத்தரவு
இந்த விசாரணையின்போது என்சிசி உடையில் மதம்சார்ந்த கோஷத்தை எழுப்ப முக்கிய காரணமாக இருந்த மாணவரை பல்கலைக்கழக நிர்வாகம் அடையாளம் கண்டது. இதையடுத்து அந்த மாணவரை பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதனை அலிகார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வாசீம் அலி உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினோம். மதக்கோஷம் எழுப்பியது தொடர்பாக மேற்கு வங்காளத்தை சேர்ந்த வாஹிதுஷமான் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இவர் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்'' என்றார்.

விரிவான விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் எந்த புகாரும் செய்யப்படவில்லை. மாறாக சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் சென்றன. இதையடுத்து விரிவான விசாரணை நடத்த பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்காக தனிக்குழுவை பல்கலைக்கழகம் அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications