நாடே உற்று பார்க்கிறது.. லோக்சபா தேர்தலுக்கான செமி-ஃபைனல்! உ.பி. முதல்கட்ட தேர்தலில் முந்துவது யார்?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச தேர்தலை இந்தியாவே எதிர்நோக்கி இருக்கும் நேரத்தில், அங்கு போட்டியிடும் கட்சிகள் குறித்தும், கூட்டணிகள் குறித்தும், அவர்களின் பிரசார யுத்திகள் குறித்தும் விவரிக்கிறது இக்கட்டுரை.

பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வரும் 10ம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் மார்ச் 14ம் தேதியுடன் உத்தரப்பிரதேச அரசின் ஆட்சிக்காலம் முடிவடைய உள்ளது.

 உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம்

பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ், ஆம் ஆத்மி என பெரிய கட்சிகள் உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் மல்லுகட்டி வருகின்றன. இந்தக் கட்சிகளுக்கு அங்குள்ள சின்ன கட்சிகள் தங்களுக்கு தேவையான கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் உள்ள சிறிய கட்சிகள் ஜாதி ரீதியாக பிரிந்து இங்குள்ள பெரிய கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் பல வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினார்கள். 2022 உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலுக்கு இங்குள்ள கட்சிகள் எப்படி தயாராகியுள்ளன என்பதை பார்ப்போம்.

பாஜக

பாஜக

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச பாஜக மீண்டும் ஆட்சியில் அமர பிரசாரம் செய்து வருகிறது. கடந்த 35 ஆண்டுகளில் எந்த கட்சியும் தொடர்ந்து ஆட்சியில் அமரவில்லை, அதை மாற்ற பாஜக முயற்சி செய்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர பல்வேறு தேர்தல் உத்திகளை கையாள்கிறது. கடந்த 2017 தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிகள் 403 தொகுதிகளில் 312 இடங்களைக் கைப்பற்றியது. 40 சதவிகித வாக்குகளைப் பெற்று 14 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் அமர்ந்தது பாஜக.

 யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த தேர்தலில், பிரதமர் மோடிக்கு இணையான பிரபலத்தைப் பெற்றிருந்தார். அதனால், சமாஜ்வாதி கட்சி முதல் அனைத்து கட்சிக்கும் மிகப்பெரிய போட்டியைக் கொடுத்தார். இந்த தேர்தலில், விவசாயிகள் பிரச்சனை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் புகாராக சொல்லி வருகின்றன. உத்தரப்பிரதேசத்தின் இந்தத் தேர்தலை, 2024 பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாக பாஜக பார்த்து வருகிறது.

அப்னா தள் (சோனிலல்)

அப்னா தள் (சோனிலல்)

வாரணாசி பகுதியில் இருக்கும் குர்மி இனத்தவர்கள் அதிகம் இருக்கும் கட்சி. 1995ல் சோன்லால் படேலால் தொடங்கப்பட்ட அப்னா தள் கட்சியில் இருந்து பிரிந்து வந்தது தான் அப்னா தள்(சோனிலல்) கட்சி. இந்தத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறது. அனுப்ரியா படேல் தலைமையிலான இக்கட்சி கடந்த தேர்தலில் 11 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களில் வென்றது.

 நிஷத் கட்சி

நிஷத் கட்சி

நிஷத், கேவத்ஸ், பிந்த், மல்லா, காஷ்யப், மன்ஜி, கோந்த் உள்ளிட்ட கட்சிகளின் முன்னேற்றங்களுக்காக 2016ல் தொடங்கப்பட்ட நிஷத் கட்சி. பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து பிரிந்து வந்த சஞ்சய் நிஷத் இக்கட்சியைத் தொடங்கினார். கடந்த 2017 தேர்தலில் 72 இடங்களில் போட்டியிட்ட நிஷத் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. இந்த முறை பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது.

 சமாஜ்வாதி கட்சி

சமாஜ்வாதி கட்சி

உத்தரப்பிரதேச சட்டசபையின் பிரதான எதிர்க்கட்சியாக இருப்பது சமாஜ்வாதி கட்சி தான். 1992ம் ஆண்டு முலாயம் சிங் யாதவால் தொடங்கப்பட்டது சமாஜ்வாதி கட்சி. தற்போது இக்கட்சியை அகிலேஷ் யாதவ் தலைமையேற்று வழிநடத்துகிறார். 2012 சட்டசபைத் தேர்தலில் மாவாயவதியின் கட்சியைத் தோற்கடித்து ஆட்சியில் அமர்ந்தது சமாஜ்வாதி. அகிலேஷ் யாதவ் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

 அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்

இந்தத் தேர்தலில் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். அதேபோல், அகிலேஷ் யாதவின் மாமா ஷிவ்பால் சிங்கின் லோகியா கட்சியுடன் கூட்டணி வைப்பதும் தற்போது உறுதியாகியுள்ளது. அதோடு உத்தரப்பிரதேசத்தின் சின்ன சின்ன கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கிறது. காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கவில்லை. அகிலேஷ் யாதவ் தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார். அனல் பறக்கும் விதமாக அவரது பிரசாரம் அமைந்துள்ளது.

 பஞ்சாயத்து தேர்தல்

பஞ்சாயத்து தேர்தல்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது சமாஜ்வாதி கட்சி. பாஜகவில் இருந்து சமாஜ்வாதி கட்சிக்கு ஓபிசி தலைவர்கள் வந்தது, கோவிட் காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை சரியாக கையாளாதது என பாஜகவுக்கு எதிரான சில விஷயங்கள் இருப்பது சமாஜ்வாதிக்கு சாதகமாகும். கடந்த தேர்தலில் தோற்றதைப் பிடிக்க சமாஜ்வாதி கட்சி முயற்சி செய்து வருகிறது..

 ராஷ்ட்ரிய லோக் தள்

ராஷ்ட்ரிய லோக் தள்

அஜித் சிங் இல்லாமல் ராஷ்ட்ரிய லோக் தள் சந்திக்கும் முதல் தேர்தல் இது. ஜெயந்த் சவுத்ரி இந்த முறை சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்துள்ளார். மேற்கு உத்தரப்பிரதேசத்தில் ஜாட் மக்களின் ஓட்டைப் பெறவேண்டும் என்பதே ஜெயந்த் சவுத்ரியின் மிகப்பெரிய வேலையாக இருக்கிறது. கடந்த 2014 தேர்தலில் ஜாட் மக்கள் ஓட்டு பாஜகவுக்கு சென்றதே, சமாஜ்வாதி தோற்கக் காரணமாக அமைந்தது. மேற்கு உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் வெற்றி பெற இந்த கூட்டணி திட்டம் வகுத்து வருகிறது.

மகான் தள் - அப்னா தள்(கே)

மகான் தள் - அப்னா தள்(கே)

கேசவ தேவ் மெளரியா 2008ல் மகான் தள் கட்சியைத் தோற்றுவித்தார். ரோஹிலாண்ட் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தில் இக்கட்சி தாக்கத்தை ஏற்படுத்தியது. மவுரியாஸ், சாக்யாஸ், குஷவாஸ், சாய்னீஸ், கம்போஜீஸ் உள்ளிட்ட பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக தொடங்கப்பட்டது தான் மகான் தள் கட்சி. 2022 சட்டசபைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. அப்னா தள்(கே) கட்சியும் இம்முறை சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்துள்ளது.

 பகுஜன் சமாஜ் கட்சி

பகுஜன் சமாஜ் கட்சி

தலித் மற்றும் பிராமண சமூகத்தின் கூட்டு ஒத்துழைப்பின் பலனாக‌ 2007ம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்தது பகுஜன் சமாஜ் கட்சி. 2007 தேர்தலில் 403 இடங்களில் 206 இடங்களைக் கைப்பற்றியது பகுஜன் சமாஜ். சமூக சீர்திருத்தத்தைக் கையிலெடுத்து, மீண்டும் பிராமணர்களிடமும் தலித் மக்களிடமும் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முயற்சி செய்கிறார் முன்னாள் முதல்வர் மாயாவதி. இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி பெரிய தாக்கத்தை இதுவரை ஏற்படுத்தவில்லை. மாயாவதியும் பெரிய அளவில் எந்த பிரசாரத்தையும் செய்யவில்லை.

 காங்கிரஸ்

காங்கிரஸ்

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் இழந்த பெருமையை மீட்டெடுக்க முயற்சி செய்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது காங்கிரஸ். கடந்த 2017 தேர்தலில் 403 தொகுதிகளில் வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அதேபோல் 2019 நாடாளுமன்ற தேர்தலில் 80 தொகுதிகளில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வென்று வந்த அமேதி தொகுதியில் ராகுல் காந்தியே தோற்றுப் போனார். இந்த முறை உத்தரப்பிரதேசத்தின் காங்கிரஸ் முகமாக பிரியங்கா காந்தியை முன்னிறுத்தி வருகிறது காங்கிரஸ் கட்சி. பிரியங்கா காந்தியும் கொஞ்சம் வித்தியாசமாக களத்தில் இறங்கி வேலை பார்க்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+