லெஸ்பியன் ஜோடிகள் ஒன்றாக சேர்ந்து வாழலாம்.. அதற்கு உரிமை உண்டு.. உ.பி. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
லக்னோ: லெஸ்பியன் இளம்ஜோடிகளை ஒன்றாக சேர்ந்து வாழ அனுமதி அளித்து உத்தரபிரதேச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் வாழ்க்கையை தீர்மானிக்க அவர்களுக்கு உரிமை உள்ளது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் 20 வயதுடைய ஒரு இளம்பெண்ணும், முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் ஒரு பெண்ணும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர்.
நாளைடைவில் இவர்களின் நட்பு ஓரின சேர்க்கையான லெஸ்பியன் காதலாக மாறியது. நானின்றி நீயில்லை, நீயின்றி நானில்லை என்ற முடிவை எடுத்த அவர்கள் சேர்ந்து வாழ திட்டமிட்டனர்.

லெஸ்பியன் ஜோடி
இதற்கிடையே ஒரு மாதத்திற்கு முன்பு அந்த 20 வயது இளம்பெண் திடீரென வீட்டில் இருந்து மாயமானார். பெற்றோர்கள், உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். இது தொடர்பாக போலீசிலும் புகார் கொடுத்தனர். போலீசார் விசரணையில் அந்த பெண் ராம்பூரில் உள்ள ஷாபாத்தில் உள்ள தனது லெஸ்பியன் காதலி வீட்டில் இருப்பது தெரியவந்தது.

நீண்ட ஆலோசனை
இதனை தொடர்ந்து அந்த பெண்ணை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்ற போலீசார், இதுபற்றி அவரது பெற்றோர்களுக்கும் தகவல் கொடுத்தனர். அப்போது அந்த பெண் தான் வீட்டுக்கு செல்ல விரும்பவில்லை என்றும் தான் நேசிக்கும் தோழியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், அவரது வீட்டுக்கு செல்ல அனுமதிக்கும்படியும் தனது பெற்றோர் முன்னிலையில் கூறினார். இதனை தொடர்ந்து இரு பெண்களிடமும், இருவரது குடும்பத்தினரும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.

சேர்ந்து வாழப்போகிறோம்
ஆனால் அந்த இரு பெண்களும் நாங்கள் சேர்ந்து வாழப்போகிறோம் என்று பிடிவாதமாக இருந்தனர். ''18 வயது நிறைவடைந்து விட்டதால் எதிர்கால வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதில் எங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. நாங்கள் சேர்ந்து வாழ்வே ஆசைப்படுகிறோம்'' என்று இருவரும் உறுதியாக தெரிவித்தனர். இதனால் இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் அவர்களை கட்டாயப்படுத்த முடியவில்லை.

நீதிமன்றம் அனுமதி
இரு பெண்களும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதாலும், ஒருவர் விருப்பத்துடன் தனது வீட்டை விட்டு வெளியேறியதாலும் இரு பெண்களையும் ராம்பூரில் உள்ள நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். இரு பெண்களும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் இருவரையும் ஒன்றாக சேர்ந்து வாழ மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார். வாழ்க்கையை தீர்மானிக்க அவர்களுக்கு உரிமை உள்ளது என்று மாஜிஸ்திரேட் கூறினார்.












Click it and Unblock the Notifications