கொய்யாப்பழம் பறிக்க நினைத்ததற்கு இப்படியா.. அடித்தே கொல்லப்பட்ட தலித் இளைஞர்.. உபியில் கொடூரம்!
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் கொய்யாப்பழம் பறித்த தலித் சமூக வாலிபரை கிராம மக்கள் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலம் உத்தர பிரதேசம். பாஜக ஆட்சி நடைபெற்று வரும் இந்த உத்தர பிரதேச மாநிலம் குற்ற செயல்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.
சிறு சிறு பிரச்சினைகளுக்கு கூட கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்படும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி உத்தரபிரதேசம் போன்ற வடமாநிலங்களில் இருந்து வெளியாகி பதை பதைக்க வைப்பதாக அமைகிறது.

தலித் நபர் அடித்து கொலை
குறிப்பாக தலித் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக இத்தகைய கொடூரங்கள் நடந்து வருகின்றன. இது போன்ற குற்றச்செயல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக யோகி ஆதித்யநாத் அரசு ஒருபக்கம் கூறி வருகிறது. ஆனாலும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்கதையாகவே நீடித்து வருகிறது. அந்த வகையில், தோட்டம் ஒன்றில் கொய்யாப்பழம் பறிக்க நினைத்தத ஒருவரை, அப்பகுதியை சேர்ந்த இருவர் கொடூரமாக அடித்து கொலை செய்து இருப்பது நெஞ்சை உலுக்குவதாக அமைந்து இருக்கிறது.

கொத்து கொத்தாக கொய்யாப்பழம்
இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். தலித் சமூகத்தை சேர்ந்த இவர் தனது ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள பகுதியில் காலைக்கடன் கழிக்க சென்றுள்ளார். அப்போது வரும் வழியில் அங்கிருந்த கொய்யாப்பழம் தோட்டத்தில் பழங்கள் கொத்து கொத்தாக காய்த்து தொங்கி கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.

மரத்தில் கட்டி வைத்து அடித்தனர்
இதனால், கொய்யாப்பழைத்தை பறித்துள்ளார். இதைக் கவனித்த பிம்சென் மற்றும் பன்வரிலால் என்ற இருவர், எப்படி கொய்யாப்பழத்தை எங்களிடம் கேட்காமல் பறிக்கலாம் என்று கூறி ஓம் பிரகாஷை கட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளனர். அதோடு ஓம் பிரகாஷை மரத்தில் கட்டியும் வைத்துள்ளனர். இதை அவ்வழியாக சென்ற சிறுவன் பார்த்து ஓம் பிரகாஷ் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளான்.

கொலை வழக்கு
இதையடுத்து, போலீசார் உதவியுடன் ஓம் பிரகாஷ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். எனினும், சிகிச்சை பலனின்றி ஓம் பிரகாஷ் உயிரிழந்தார். தலித் சமூகத்தை சேர்ந்தவர் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்துள்ளனர். கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் கீழும் அவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications