டார்கெட் "2024".. இதுமட்டும் நடந்தால் பாஜகவை கையில் பிடிக்க முடியாது.. உ.பி ரிசல்ட் ஏன் முக்கியம்?
லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வெல்லும் பட்சத்தில் அது 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு சாதகமாக முடியும் வாய்ப்புகள் உள்ளன.
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் முடிவுகள் வர உள்ளன.
இதில் உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு இங்கு ஆட்சி செய்து வருகிறது.

தேர்தல்
உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக இந்த முறை தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 10ம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ம் தேதி வரை நடைபெற்றது. 403 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இங்கு மெஜாரிட்டி பெற 202 தொகுதிகளில் வெல்ல வேண்டும். முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக, அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், பிரியங்கா காந்தியை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் களம் கண்டன.

எப்படி கடந்த தேர்தல்
7 கட்ட தேர்தல் என்பதால் தேர்தல் களம் கடந்த ஒரு மாதமாக இங்கு விறுவிறுப்பாக இருந்தது. 5 மாநில தேர்தலில் அதிகம் பேசப்பட்ட, அதிகம் சர்ச்சைகளுக்கு உள்ளன தேர்தல் களம் என்றால் அது உத்தர பிரதேச களம்தான். ராமர் கோவில் விவகாரம், கர்நாடக ஹிஜாப் விவகாரம், இந்து முஸ்லீம் பிரச்சனை, விவசாய பிரச்சனை, உக்ரைன் போர் என்று பல விஷயங்கள் இந்த தேர்தல் நேரத்தில் உத்தர பிரதேசத்தில் விவாத பொருளாக இருந்தது. யோகி ஆதித்யநாத தலைமையிலான பாஜக அங்கு ஆட்சி நடத்தி வரும் நிலையில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாஜகவிற்கு ஏன் முக்கியம்
இதெல்லாம் போக உத்தர பிரதேச தேர்தல் களம் வேறு சில காரணங்களுக்காகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அது லோக்சபா தேர்தல்! 2024ல் நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் இருந்து மட்டும் 80 எம்பிக்கள் லோக்சபாவிற்கு செல்கிறார்கள். உத்தர பிரதேசத்தில்தான் அதிக அளவில் எம்பிக்கள் உள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் அடுத்த தேர்தலுக்கு முன்பாக மேலும் பல எம்பி இடங்கள் இங்கே உருவாக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.

வெற்றி
இங்கு கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக 62 இடங்களை வென்றது. தேசிய அளவில் பாஜக லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை பெற இது பெரிய அளவில் உதவியது. அங்கு மாநில ஆட்சியில் பாஜக இருந்ததும் கூட அந்த கட்சியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு இந்த முறை சட்டசபை தேர்தலை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் பாஜக இருக்கிறது. ஆனால் பாஜகவிற்கு இது அவ்வளவு எளிதானதும் கிடையாது.

எளிமை இல்லை
உத்தர பிரதேசத்தில் கொரோனா இரண்டாம் அலையின் போது கங்கையில் பிணம் மிதந்தது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. அதேபோல் சீனா இந்திய எல்லையில் ஆக்கிரமித்து இருப்பது, விவசாய போராட்டம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, இந்து முஸ்லீம் மோதல், விலைவாசி உயர்வு என்று பல விஷயங்கள் இந்த உத்தர பிரதேச தேர்தலில் கவனம் பெற்றன. முக்கியமாக உத்தர பிரதேசத்தில் தலித் வாக்குகள், இஸ்லாமியர்கள் வாக்குகள் பாஜகவிற்கு எதிராக செல்லும் சூழ்நிலை அதிகம் நிலவி வந்தது.

பாஜக
இதெல்லாம் போக பாஜக என்பது ஓசி பிரிவினருக்கான கட்சி என்ற விமர்சனமும் வைக்கப்பட்டது. இதனால் அங்கு மண்டல் அரசியல் இந்த முறை தலைதூக்கியது. அதாவது பிற்படுத்தப்பட்ட பிரிவினர், யாதவ் பிரிவினர் பாஜகவிற்கு எதிராக அலையாக திரண்டனர். இதன் காரணமாக பல ஓபிசி தலைவர், பிரிவினர் சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவிற்கு ஆதரவு அளித்ததும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு மாவட்டங்களில் இது தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.

என்ன நடக்கும்?
உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 இடங்கள் உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக 303 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது. அங்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. அங்கு பாஜக கூட்டணிக்கு அப்னா தளம் கட்சியின் 9 இடங்களையும் சேர்த்து 312 இடங்கள் உள்ளன. எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சிக்கு 49 இடங்கள் உள்ளன. பகுஜன் சமாஜ் பார்ட்டிக்கு 15 இடங்கள் உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 7 இடங்கள் உள்ளன.

பாஜக வெல்லுமா
இங்கு பாஜக மீண்டும் வெல்லும் பட்சத்தில் அது லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றிபெற மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். அதாவது மீண்டும் அங்கு பாஜக ஆட்சியை கைப்பற்றினால், லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு சாதகமாக அது அமையும். 300+ இடங்களை பாஜக வெல்லும் பட்சத்தில் மீண்டும் லோக்சபா தேர்தலிலும் 2024ல் பாஜக வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதுவரை வெளியான கருத்து கணிப்புகளில் பாஜக 230 இடங்கள் வரை வென்று தேர்தலில் வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

2024 டார்கெட்
கருத்து கணிப்புகளில் கூறியபடி பாஜக உ.பி.யில் எளிதாக வெற்றி பெற முடிந்தால் 2024 ஆம் ஆண்டு எளிதாக பாஜக வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. பல்வேறு அதிருப்திக்கு இடையில் பாஜக இந்த வெற்றியை பெறுமா என்பது கேள்வியாக உள்ளது. அதே சமயம் கடந்த தேர்தலை விட பாஜக 100-80 இடங்கள் குறைவாக பெறும் பட்சத்தில் லோக்சபா தேர்தலிலும் பாஜக அதிக அளவிலான இடங்களை இழக்கும் வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. என்ன நடக்கும்.. பாஜக மீண்டும் உத்தர பிரதேசத்தை வெல்லுமா.. 2024 தேர்தலுக்கு இப்போதே வலுவாக நங்கூரம் போடுமா என்று இன்று தெரிந்துவிடும்!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications