ஏழைகள் தன்னம்பிக்கை பெற பிரதமர் மோடியின் திட்டங்கள் முக்கிய காரணம்! யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: ஏழைகள் தன்னம்பிக்கை பெறுவதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் அவசியமாகிறது என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
தெருவோர வியாபாரிகள் சுயச்சார்பு நிதி (பி.எம். எஸ்.வி.நிதி) திட்டம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பிரசாரத்தை யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். பின்னர் சிறப்புரையாற்றிய அவர், "கடந்த 2014ம் ஆண்டுக்கு முன் ஏழைகளுக்கு வங்கிக் கணக்கு இல்லை. இன்று நாட்டில் 48 கோடிக்கும் அதிகமான ஏழைகள் வங்கிக் கணக்கை வைத்துள்ளனர். மத்திய அரசிடமிருந்து வரும் பணம் நேரடியாக அவர்களின் கணக்குகளுக்குச் செல்கிறது.

வங்கிக் கணக்குகள் தொடங்குவதற்கு முன்னர் ஏழைகள், தங்களுக்கான நிவாரணத்தை பெறும்போது கூட அதற்காக லஞ்சத்தை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் தற்போது இந்த நிலைமை கிடையாது. உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் மத்திய அரசின் நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து தற்போது வரை 54 லட்சம் பேருக்கு வீடுகளை கட்டி கொடுத்திருக்கிறோம். கோரக்பூரில் உள்ள நகர்ப்புறங்களில் 36,000க்கும் அதிகமானோர் பிரதமர் ஆவாஸ் யோஜனாவிலும், 24,000க்கும் மேற்பட்டோர் பிரதமர் ஸ்வாநிதியிலும் பயனடைந்துள்ளனர்.
இதுதான் எங்கள் ஆட்சியின் வெற்றி. இந்த ஆட்சி சாதி, மதம், இனம் மற்றும் குடும்ப அரசியல் இல்லாத ஆட்சி. இந்த ஆட்சியின் மூலம் ஏழை மக்கள் தன்னம்பிக்கை பெற்றிருக்கின்றனர்" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications