திடீரென விற்கப்பட்ட பசுமாடு.. 1 கிமீ தூரம் டெம்போவை துரத்தி சென்ற காளை.. உருக்கமான கதை!
மதுரை: மதுரையில் காளைமாடு ஒன்று தனக்கு நெருக்கமான பசுமாட்டை துரத்தி சென்ற சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது.
மதுரை அருகே பாலமேடு பகுதியை சேர்ந்த காளைமாடு மஞ்சமாலி. இந்த மாடு அங்கு இருக்கும் பாலமேடு கோவிலில் வளர்ந்தது.
அதே கோவிலில் இன்னொரு பசுமாடான லட்சுமி வளர்ந்தது. இந்த இரண்டு மாட்டையும் அங்கு இருந்த முனியாண்டி என்ற நபர் வளர்த்து வந்தார்.

லாக்டவுன் காரணமாக
இந்த நிலையில் அந்த மாடுகளை வளர்த்து வந்த முனியாண்டி கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கஷ்டப்பட்டு இருக்கிறார். அதிலும் லாக்டவுன் காரணமாக மிக அதிகம் கஷ்டப்பட்டு இருக்கிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளார். இதை அடுத்து தான் வளர்த்த அந்த இரண்டு மாடுகளில் பசுமாடு லட்சுமியை விற்க முடிவு எடுத்துள்ளார்.

மாட்டை விற்றார்
இதையடுத்து அந்த லட்சுமி மாட்டை நேற்று முனியாண்டி வேறு ஒரு நபருக்கு விற்றார். அவர் இந்த மாட்டை வாங்கி செல்ல வந்த போதுதான் அந்த உருக்கமான சம்பவம் நடந்துள்ளது. இந்த பசுமாட்டை முதலில் டெம்போவில் ஏற்றி இருக்கிறார்கள். இதை பார்த்ததும், லட்சுமியை விற்க போகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட அந்த காளைமாடு வேகமாக அந்த டெம்போவை துரத்தி இருக்கிறது.

வேகமாக துரத்தியது
அந்த டெம்போ பின்னாடி வேகமாக சென்ற அந்த காளை மாடு, முன்னே சென்று டெம்போவை மறித்து உள்ளது.அதன்பின் பின்னே இருந்த லட்சுமியிடம் சென்று காளை மாடு கண்ணீர் விட்டு அழுது உள்ளது. இந்த சம்பவம் எல்லாம் வீடியோவாக பதிவாகி உள்ளது. அந்த காளை கண்ணீரோடு, அந்த பசுமாட்டை துரத்தி சென்றுள்ளது.

எவ்வளவு தூரம்
சுமார் 1 கிமீ தூரத்திற்கு அந்த காளை, அந்த டெம்போவை துரத்தி சென்றுள்ளது. அதன்பின் வண்டியை துரத்த முடியாமல் நின்றுவிட்டது . இந்த சம்பவம் அங்கே இருந்தவர்களை கலங்க வைத்துள்ளது. அதேபோல் இந்த சம்பவம் தற்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது .
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications