மதுரை ராகுலுக்கு அடித்தது லக்... 21 ஆயிரம் ரூபாயில் போன் வாங்கித் தந்த சிவக்குமார்!
Recommended Video

மதுரை : மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செல்பி எடுத்த இளைஞரின் செல்போனை தட்டிவிட்ட நடிகர் சிவக்குமார் அதே இளைஞருக்கு ரூ. 21 ஆயிரம் மதிப்பிலான செல்போனை வாங்கி பரிசளித்திருக்கிறார்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிததாக கட்டப்பட்டுள்ள தனியார் கருத்தரிப்பு மைய திறப்பு விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார். அப்போது இளைஞர் ஒருவர் செல்போனில் செல்பி எடுக்க முயன்றார்.
கோபமடைந்த சிவக்குமார் செல்போனை கோபமாக தட்டிவிட்டார். இந்த வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எத்தனையோ மேடைப்பேச்சுகளில் நல்ல பல கருத்துகளை சிவக்குமார் கூறிய போதும் அது மக்களிடையே சென்று சேராவிட்டாலும் சிவக்குமாரின் இந்த வீடியோ வைரலானது.

வைரல் மீம்கள்
சமூகவலைதளத்தில் சிவக்குமாரை கேலி செய்யும் விதமாக மீம்ஸ்களும் பறந்தன. செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ராகுலுக்கு ஆதரவாகவும் கருத்துகள் பகிரப்பட்டன.

வருத்தம் தெரிவித்தார்
இந்நிலையில் நடிகர் சிவக்குமார் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். ரசிகர்கள் அப்படித் தான் உணர்ச்சிவசப்படுவார்கள், ஒரு கலைஞன் அதையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால், செல்போனை தட்டிவிட்டது தவறு என மக்கள் நினைத்தால் என் செயலுக்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்று ஆடியோ மற்றும் வீடியோவை வெளியிட்டார் சிவக்குமார்.

செல்போன் உடைந்து போனது
இளைஞர் ராகுல் தன்னுடைய செல்போன் உடைந்துவிட்டதாக வெளியிட்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில் நடிகர் சிவக்குமார் ராகுலுக்கு தீபாவளி பரிசாக புதிய செல்போனை கொடுத்துள்ளார்.

கிடைத்தது புது போன்
நடிகர் சிவக்குமார் சார்பில் பாதிக்கப்பட்ட ராகுலுக்கு ரூ.21 ஆயிரம் மதிப்பிலான புதிய செல்போன் நேரில் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பெற்றுக் கொண்ட மாணவன் செல்போன் தட்டிவிடப்பட்ட காட்சியை சமூகவலைதளத்தில் வைரலாக்கிய இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications