சென்னை மதுரையில் புதிய முறையில் தார் சாலை... பள்ளங்களால் இனி பிரச்சனையில்லை.. மக்களிடையே வரவேற்பு
மதுரை: சென்னை மற்றும் மதுரையில் தார் சாலை அமைப்பதில் புதிய முறையை கடைபிடிப்பதால், பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. பள்ளங்களில் தார் சாலை அமைக்கும் புதிய முறையால் சாலைகள் பல நாட்கள் நன்றாக இருக்கும். அப்படி என்ன முறை என்பதை இப்போது பார்ப்போம்.
பொதுவாக சாலைகளில் பாதாள சாக்கடை பணி, குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளும் போது, சாலைகளை சமன் செய்து ஜல்லியை கொட்டி சாலை அமைப்பார்கள். ஆனால் அப்படி சாலைகள் அமைத்த பின்னர், சில நாட்களில் சாலைகளில் பள்ளம் ஏற்பட்டுவிடும். அந்த சாலையும் வீணாகிவிடும். இதுதான் பல நாட்களாக தமிழகத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் சாலைகளில் பாதாள சாக்கடை பணி, குடிநீர் திட்டப் பணியால் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் சாலைகள் புதிய முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்,.
மதுரை மாநகராட்சியில் 28 வார்டுகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சுமார் 100 வார்டுகளில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப் பணியும் நடந்து வருகிறது. இந்த இரு பணிகளும் நிறைவடையும் சாலைகளில் ரூ.480 கோடியில் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
இந்நிலையில் முன்பெல்லாம்குழாய் பதிக்கும் பணிகள் நடந்த போது, சாலையைச் சமப்படுத்தி ஜல்லிக்கற்களையும், தார் கலவையையும் பரப்பி சாலையை அமைப்பார்கள். அதனால் பள்ளம் தோண்டிய சாலைகள் சில மாதங்களில் இறங்கி விடுகிறது. மழைக் காலத்தில் மேடு பள்ளமாகி விடும். இதுபோன்று குழி தோண்டி முறையாகச் சாலையை அமைக்காததே முக்கியக் காரணம் ஆகும்.
இந்நிலையில், பள்ளம் தோண்டிய சாலைகளில், தார்க்கலவை இறங்காமல் இருக்க புதிய முயற்சி செய்துள்ளார்கள். இதன்படி பள்ளம் தோண்டி சமப்படுத்திய சாலைகல்ள 60 செ.மீ. முதல் 80 செ.மீ. அகலம் வரை குழிகளைத் தோண்டி அதில் கான்கிரீட் கலவை கொட்டப்படுகிறது. இதை சில நாட்கள் காய விட்டு ஜல்லிக் கற்களைப் பரப்பி, தார் கலவையைக் கொட்டி சாலையை அமைக்கின்றனர்.
இப்படி சாலைகள் அமைத்தால் சாலைகளில் எதிர்காலத்தில் பள்ளம் ஏற்படாது. மதுரையில் இப்படித்தான் இப்போது சாலைகளை அமைத்து வருகிறார்கள். சாலைகளை முன்பு பள்ளம் தோண்டி மூடிய பின்னர் சாலை அமைக்கும் போது கனரக வாகனங்கள் செல்ல செல்ல அவை பள்ளமாகி சாலை, சில மாதங்களிலேயே சேதம் ஆகிவிடும். ஆனால் பள்ளம் தோண்டிய இடத்தில் சல்லி போட்டு சமன் செய்த பின்னர் அமைப்பதால் இப்போது சாலைகள் இறங்குவது இல்லை. தரமாகவும் இருக்கின்றன.

சென்னை மடிப்பாக்கம் பகுதியிலும் மழைநீர் வடிகால் பணிகள் நடந்தது. மேலும் பாதாள சாக்கடை பணிகளும்,குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளும் நடந்தது. இங்கு சாலைகளை அப்படியே பள்ளத்தை மூடும் அதிகாரிகள்.. சில நாட்கள் அப்படியே விடுகிறார்கள். அதன்பின்னர் சாலைகளில் வாகனங்கள் செல்ல செல்ல பள்ளம் ஏற்படுகிறது.
அதன்பின்னர் சாலைகளில் பள்ளம் தோண்டி மூடிய பகுதிகளில் சாலைகளில் குறிப்பிட்ட அளவு ஜல்லி மற்றும் சிமெண்ட் கலவையை கொட்டி சமன் செய்கிறார்கள். சமன் செய்த பின்னர் சில நாட்கள் அப்படியே காய்கிறது.காய்ந்த பின்னர் அந்த பாதையில் தாரை கொட்டி தார் சாலைஅமைக்கிறார்கள்.
மடிப்பாக்கம் பகுதி முழுவதும் தற்போது தார்சாலைள்இப்படித்தான் அமைக்கப்படுகிறது. மடிப்பாக்கம் பகுதி பள்ளமான பகுதி என்பதால் தண்ணீர் அதிக மழை பெய்தால் தேங்கும். இந்நிலையியில் சாலைகள் இப்போது தரமாக அமைக்கப்படுவதால் இனி சாலைகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு இல்லை.












Click it and Unblock the Notifications