அடுத்தடுத்து அவமதிக்கப்படும் எம்ஜிஆர் சிலைகள்! நேற்று சாணி.. இன்று காவி! கொந்தளிக்கும் ர.ர.க்கள்!
மதுரை : மதுரையில் மாவட்டம் நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆரின் சிலையில் காவித் துண்டு அணிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், காவி துண்டு அணிவித்த நபர்கள் குறித்து மதுரை அண்ணாநகர் காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்தினர்.
மதுரை மாநகர் கேகே நகர் மாவட்ட நீதிமன்றத்தின் அருகில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலையானது நிறுவப்பட்டுள்ளது.
இங்குள்ள எம்.ஜி.ஆரின் சிலை கடந்த 2001ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு எம்.ஜிஆரின் சிலை அருகிலேயே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் சிலை
இதில் ஒவ்வொரு ஆண்டும் எம்.ஜி.ஆர், ஜெ., பிறந்தநாள் மற்றும் நினைவுநாட்களில் ஏராளமான தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள். இந்த நிலையில் மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள எம்ஜிஆரின் முழு உருவச்சிலையில் இன்று மதியம் மர்ம நபர்கள் காவித்துண்டை அணிவித்து சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

காவி துண்டு
இதனையடுத்து அந்த பகுதிக்கு வந்த அண்ணாநகர் காவல் துறையினர் எம்ஜிஆர் சிலை மீது அணிவிக்கப்பட்டிருந்த காவிதுண்டைய அகற்றினர். இதனையடுத்து காவித்துண்டை அணிவித்தது யார் என்பது குறித்தான விசாரணையை நடத்து வருகின்றனர். முதற்கட்டமாக சிலை அருகே உள்ள கடைகளில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதோடு அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்

சிலை சேதம்
ஏற்கனவே தமிழகத்தில் திருவள்ளுவர், அண்ணா, பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு காவிச்சாயமும், காவித்துண்டும் அணிவிக்கப்படும் சம்பவங்கள் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தும் நிலையில், மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை மீது காவித்துண்டு போடப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சாணி வீச்சு
நேற்று முன் தினம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நிறுவப்பட்டிருந்த எம்ஜிஆர் சிலை அவமதிக்கப்பட்டது. மர்ம நபர்கள் சிலர் எம்.ஜி.ஆர் சிலை மீது சாணியை வீசிய நிலையில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் ஒன்றிய செயலாளர் உள்ளிட்டோர் அப்பகுதியில் கூடியதால் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் இரு நாட்களில் அடுத்தடுத்து எம் ஜி ஆர் சிலை அவமதிக்கப்பட்டது அதிமுகவினிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications