அரசியலில் ஆர்வம் காட்டும் அதிமுக மாஜி அமைச்சர் மகள்! திருமணத்துக்கு பிறகு முழுவீச்சில் கட்சிப்பணி?
மதுரை: அரசியலில் ஆர்வம் காட்டி வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் மகள் பிரியதர்ஷினி, மிக விரைவில் முழுவீச்சில் கட்சிப்பணிகளில் இறங்கினாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லையாம்.
பள்ளிப்பருவம் முதலே பிறருக்கு உதவும் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர் பிரியதர்ஷினி.
இதனால் தான் தனது தந்தை ஆர்.பி. உதயகுமார் முன்னின்று நடத்தும் அனைத்தும் நிகழ்வுகளிலும் பங்கேற்று அவருக்கு அரசியலில் உதவிக்கரமாக இருக்கத் தொடங்கியுள்ளார் பிரியதர்ஷினி.

51 ஜோடிகளுக்கு திருமணம்
மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் வரும் பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி அன்று 51 ஏழை எளிய ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கவுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். இந்த 51 ஏழை ஜோடிகளுடன் சேர்ந்து அதே மேடையில் தனது மகள் பிரியதர்ஷினிக்கும் திருமணம் நடத்துகிறார் ஆர்.பி. உதயகுமார். இந்த விழாவுக்கு எடப்பாடி பழனிசாமியை தலைமை தாங்க வைப்பதுடன் தமிழகம் முழுவதும் உள்ள கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பும் விடுத்து வருகிறார்.

ஆர்.பி.உதயகுமார் மகள்
ஆர்.பி.உதயகுமார் மகள் பிரியதர்ஷினியை பொறுத்தவரை சிறுவயது முதலே சமூகப் பணிகளில் ஆர்வமாக செயல்படுபவர். இதனால் தான் பி.இ. முடித்துள்ள இவர் தற்போது MSW படித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் அரசியலில் உள்ள ஆர்வம் காரணமாக தனது தந்தைக்கு உதவிக்கரமாகவும் இருந்து வருகிறார். இதனால் திருமணத்துக்கு பிறகு ஆர்.பி.உதயகுமாரின் மகள் பிரியதர்ஷினி நேரடி அரசியலில் ஈடுபட்டாலும் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் என்ட்ரி
இதனிடையே 51 ஏழை ஜோடிகளுடன் சேர்த்து தனது மகளுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திருமணம் நடத்தி வைப்பதற்கான பின்னணியில் சில அரசியல் காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும் தனது மகள் பிரியதர்ஷினியின் அரசியல் என்ட்ரிக்கான அச்சாரமாக இது அமையக்கூடும் என அவர் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. மதுரையில் அண்மையில் நடைபெற்ற அமைச்சர் மூர்த்தி இல்ல மண விழா பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் அதற்கு சற்றும் சளைக்காமல் பிரம்மாண்டம் காட்ட திட்டமிட்டிருக்கிறாராம் உதயகுமார்.

எடப்பாடிக்கு அழைப்பிதழ்
பொதுவாக அழைப்பிதழ் கொடுப்பதற்கு மணமக்களின் பெற்றோர்கள் தான் செல்வது வழக்கம். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்கு மணமகளான ஆர்.பி.உதயகுமாரின் மகள் பிரியதர்ஷினியே நேரில் சென்று அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், தனது அம்மா மற்றும் தம்பியையும் ஆர்.பி.உதயகுமார் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தார்.
-
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே?












Click it and Unblock the Notifications