காதில் வாங்காத ஸ்டாலின்.. வீதிக்கு வரும் மக்கள்..! அப்படியே தலைகீழா நடக்குது.. அதிமுக மாஜி அதிரடி..!
மதுரை: திமுக ஆட்சியில் அச்சத்துடன் இருக்க வேண்டிய கூலிப்படையினர் தமிழகத்தில் வெளியே சுதந்திரமாக நடமாடுகிறார்கள் எனவும், சுதந்திரமாக வெளியே நாடமாட வேண்டிய மக்களோ அச்சத்துடன் வீட்டில் முடங்கி இருக்கிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," திமுக எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழக மக்களுக்கு கடுமையான மின்வெட்டாலும், மின் கட்டண உயர்வாகும் பெரிதும் பாதிக்கப்படுவதை கடந்த கால வரலாறாக தமிழகம் கண்டு இருக்கிறது .

தற்போது தமிழக மக்களை அனைத்து வகைகளிலும் வாட்டி வதைப்பதற்கென்று ஒரு ஆட்சி தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தமிழக மக்களின் சுமையை குறைக்க ஜெயலலிதா அவர்கள் 100 யூனிட் விலையில்லா மின்சாரத்தை வழங்கி சாதனை படைத்தார்கள்.
இன்றைக்கு திமுக அரசு சொத்து வரி உயர்வு ,குப்பை வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு ,மின்சார கட்டண உயர்வு,பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு என்று வருகிறது. ஆனால் ஆட்சி உயரத்தை பறைசாற்றுவதாக விளம்பரம் வெளிச்சத்திலே தொடர்ந்து அரசு அக்கறை செலுத்தி வருகிறது. இந்த அரசு மக்களுக்கு உண்மையிலேயே பயன் சென்றடைகிறதா என்பதை எள் முனை அளவு ஆய்வு செய்யாமல், விளம்பர வெளிச்சத்தால் நடைபெறுகிற நாடகம் என்பதை போல,இருட்டு அறையில் உள்ளதடா உலகம் என்கின்ற நிலையிலே தமிழகம் இருள் சூழ்ந்து கொண்டிருக்கிறது
தேர்தல் அறிக்கையில் என்ன சொன்னார்கள்? மக்களுடைய வாழ்வாதாரமும் கொரோனா காலத்தால் பாதிக்கப்பட்டு கேள்விக்குறியாக இருக்கிறது மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று கூறினார்கள். கடந்த எட்டு ஆண்டுகளாக அதிமுக ஆட்சி காலத்தில் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் மின்கட்டணத்தை உயர்த்த ஆலோசனை செய்யப்படும் என்று தகவலை கேள்விப்பட்டவுடன் உடனடியாக ஸ்டாலின் போராட்டம் செய்து மின்சாரத்தைத் தொட்டால் சாக்கடிக்கும் ஆனால் மின்சார கட்டணத்தை கேட்டாலே சாக்கடிக்கென்று, வானத்திற்கு பூமிக்கும் குதித்தார் ஸ்டாலின்.
நிர்வாக சீர்கேட்டால் மக்கள் மீது சுமத்தியது அநியாயம். ஆனால் மின் கட்டணத்தை உயர்த்தி விட்டு மற்ற மாநிலங்களுக்கு ஒப்பிட்டு நியாயப்படுத்துகிறார். வாக்களித்த மக்களுக்கு மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு சொல்வது அழகல்ல. மத்திய அரசு ஆணையின்படி மின்சார வாரியத்தின் இழப்பை அம்மாவின் ஆட்சியிலே, எடப்பாடியார் முதலமைச்சராக இருக்கிறபோது அந்த மின்சார வாரியத்தின் இழப்பை மாநில அரசு ஏற்றுக் கொண்டது.
2024 ஏப்ரல் முதல் ரேசன் கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு போன்றவற்றை வழங்கப்படவில்லை. ஆகவே மின் கட்டணத்தை உயர்வை கண்டித்தும், ரேஷன் கடைகளில் பருப்பு, சமையல் எண்ணெய் வழங்காதை கண்டித்தும் தமிழக முழுவதும் உள்ள கழக அமைப்பு ரீதியாக 82 மாவட்டங்களில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க நாளை 23ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .
இந்த அரசு எதையும் காதில் வாங்கிக் கொள்ள நிலையில்தான் உள்ளது. இது ஆணவத்தின் உச்சமும் உள்ளது. அரசிற்கு புத்தி புகட்ட வீதியில் போராட்டத்தில் இறங்கி அரசு கவனத்திற்கு கொண்டுவர களத்தில் இறங்கி உள்ளோம். நம்மையெல்லாம் ஆடு மாடுகளை விட கேவலமாக நடத்தி இன்றைக்கு மனித நேயமற்ற ஒரு அரசாக கொடுங்கோல் அரசாக இருக்கிறது. இந்த திமுக அரசில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு வருபவர்களுக்கு பாதுகாப்பு இல்லை
அச்சத்தோடு இருக்கும் கூலிப்படையினர் இன்றைக்கு அச்சமில்லாமல் வெளியே நடமாடுகிறார்கள். வெளியே நடமாடும் மக்களோ அச்சத்துடன் உயிரை பாதுகாத்துக் கொள்ள வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள். ஆகவே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் தொழிலாளர்களும் அனைவரும் பங்கேற்க வேண்டும்" என கூறினார்.












Click it and Unblock the Notifications