மோடி பிறந்தநாளுக்கு மாட்டு வண்டி பந்தயமேதான் நடத்தனுமா? நெல்லை எஸ்பி பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
மதுரை: பிரதமர் மோடி பிறந்தநாளில் மாட்டுவண்டி பந்தயம் நடத்த அனுமதிகோரி தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட எஸ்பி பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் பிறந்தநாள் விழாவில் மாட்டு வண்டி பந்தயம் தான் நடத்த வேண்டுமா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழகத்தில் பாஜக கட்சியை வளர்க்க மேலிட தலைவர்கள் முடிவு செய்து அதற்கான வியூகங்களை வளர்த்து வருகின்றனர். மாநிலத்தில் உள்ள தலைவர்கள், மாவட்ட அளவிலான தலைவர்கள் தொடர்ந்து ஆர்பாட்டங்கள், பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதுதவிர பாஜகவின் முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் விழா, தேசத்தலைவர்களின் பிறந்தநாட்களின்போதும் பல்வேறு நலத்திட்டங உதவிகள் வழங்கப்பட்டு வருவதோடு வேறு சில நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி பிறந்தநாள்
பிரதமர நேரந்திர மோடியின் பிறந்தநாள் விழா வரும் 17 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை நாடு முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாட பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். இவரது பிறந்தநாளில் விளையாட்டு போட்டிகள் நடத்தவும், நலத்திட்டங்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாட்டு வண்டி பந்தயம்
இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளில் திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரத்தில் மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பந்தயங்களுக்கு அனுமதிக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அனுமதியில்லை என வாதம்
அப்போது அரசு தரப்பில் மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயங்கள் நடத்த அனுமதி கிடையாது என வாதிடப்பட்டது. இந்த வேளையில், முக்கிய நிர்வாகிகள், விஐபிக்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் நீதிமன்றம் அனுமதி கொடுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

எஸ்பிக்கு உத்தரவு
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம்‛‛சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது அதில் பாரபட்சம் கட்டக்கூடாது. பிறந்தாள் விழாவில் இனிப்புகள் வழங்கலாம். நலத்திட்ட உதவிகள் செய்யலாம். மாட்டு வண்டி பந்தயம் தான் நடத்த வேண்டும் என்பதில்லை'' என கருத்து தெரிவித்தது.மேலும் இதுபற்றி திருநெல்வேலி எஸ்பி பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications