தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையம் - மு.க ஸ்டாலின் திறப்பு
மதுரை அருகே உள்ள தோப்பூரில் அமைக்கப்பட்டுள்ள 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
மதுரை: திருமங்கலம் அருகே தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனோ சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த சிகிச்சை மையத்தில் அனைத்து படுக்கைகளிலும் கான்சென்ரேட்டர் எனப்படும் அக்சிஜன் செறிவூட்டி கருவி பொறுத்தபட்டுள்ளது. அனைத்து படுக்கைகளிலும் ஆவி பிடிப்பதற்கான கருவி தனித்தனியாக பொறுத்தபட்டுள்ளது.
Recommended Video
மதுரை மாவட்டத்தில் நாள்தோறும் கொரோனோ பாதிப்பு அதிகரித்து வருகிறது. 2ம் அலையில் இதுவரை 30,521 பேருக்கு கொரோனோ பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1269 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தற்பொழுது 9146 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனோ பரவல் சராசரியாக 13 சதவீதமாக உள்ளது

192 இடங்கள் கட்டுப்படுத்தபட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனோ பாதிப்பு அதிகரிப்பால் சிகிச்சை பெருவதற்கான ஆக்சிஜன் படுக்கைகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிரம்பியதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்
இந்நிலையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மதுரையில் கொரோனோ தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை மற்றும் ஆய்வு மேற்கொண்டார். இன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனோ தடுப்பு பணிகள் குறித்து அரசு அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டதை தொடர்ந்து திருமங்கலம் அருகே தோப்பூரில் அமைக்கப்பட்டுள்ள 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனோ சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
இந்த சிகிச்சை மையத்தில் முதல்கட்டமாக 200 ஆக்சிஜன் படுக்கைகள் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. சிகிச்சை மையத்தை திறந்து வைக்கும் முன்னதாக முதல்வர் ஸ்டாலின், மருத்துவர்கள், சுகாதார துறை அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் இருப்பு ஆகியவற்றையும் கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள 7,100 படுகைகளில் 2 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3052 ஆக்சிஜன் படுகைகள் உள்ள நிலையில் அனைத்து படுக்கைகளும் நிரம்பியுள்ளன.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இதைத்தொடர்ந்து மதுரை அருகே உள்ள தோப்பூருக்கு காரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு அமைக்கப்பட்டுள்ள 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை அவர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்த சிகிச்சை மையத்தில் அனைத்து படுக்கைகளிலும் கான்சென்ரேட்டர் எனப்படும் அக்சிஜன் செறிவூட்டி கருவி பொறுத்தபட்டுள்ளது. . அனைத்து படுக்கைகளிலும் ஆவி பிடிப்பதற்கான கருவி தனித்தனியாக பொறுத்தபட்டுள்ளது. அனைத்து படுக்கைகளுக்கும் தனித்தனி மின் விசிறி அமைக்கப்பட்டுள்ளது
ஆக்சிஜன் படுக்கைக்கான பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் தற்பொழுது 500 ஆக்சிஜன் படுக்கை கொண்ட சிகிச்சை மையம் திறக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications