நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டு உண்மையா? மதுரை ஏர்போர்ட்டில் நடந்தது இதுதான்.. அதிகாரி விளக்கம்
மதுரை: மதுரை விமான நிலையத்தில் ஆங்கிலத்தில் பேசக்கூறியும் இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகள் மீது நடிகர் சித்தார்த் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், சித்தார்த் வருகை தந்த போது விமான நிலையத்தில் நடந்தது என்ன? அவர் கூறிய குற்றச்சாட்டுக்கள் உண்மைதானா? என்று விமான நிலைய அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல நடிகர் சித்தார்த் மதுரை விமான நிலையத்தில் தனது வயதான பெற்றோருடன் சென்ற போது இந்தியில் பேசி சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதாக தனது இன்ஸ்டாகிரமில் பதிவிட்டு இருந்தார்.
சித்தார்த்தின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு தினங்களாக பேசுபொருளாக மாறியுள்ளது. அரசியல் ரீதியாகவும் சித்தார்த்தின் இந்த குற்றச்சாட்டு கவனம் பெற்றது.

கடுமையாக நடந்து கொண்டனர்
சித்தார்த் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டு இருந்த பதிவில், "காலியாக இருந்த மதுரை விமான நிலையத்தில் சுமார் 20 நிமிடங்கள் காத்திருக்க வைத்து சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் தன்னையும் தனது பெற்றோரையும் துன்புறுத்தினார்கள். எனது பெற்றோர்களின் பைகளில் இருந்த காயின்களை எடுக்குமாறு கூறினர். தொடர்ந்து எங்களிடம் இந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர். ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்திய போதும் தொடர்ந்து இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டனர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்றும் கூறினர். வேலையில்லாதவர்கள் தங்கள் அதிகாரத்தை காட்டுகின்றனர்" என்று பதிவிட்டு இருந்தார்.

நடிகர் சித்தார்த்திற்கு ஆதரவு
சித்தார்த்தின் இந்த கருத்து பெரும் விவாதப்பொருளாக மாறியது. நடிகர் சித்தார்த்திற்கு ஆதரவாக
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டு இருந்தார். அவர் வெளியிட்ட பதிவில், "மதுரை விமானநிலையத்தில் சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென மதுரை விமான நிலைய அதிகாரிகளிடம் கோரியுள்ளேன்" என்று பதிவிட்டு இருந்தார்.

சித்தார்த்திடம் முகக்கவசத்தை அகற்றுமாறு
இந்த நிலையில், விமான நிலையத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து மதுரை விமான நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- சித்தார்த் சென்னை செல்வதற்காக தனது குடும்பத்தினருடன் மதுரை விமான நிலையம் வந்தார். மாலை 4.15 மணியளவில் சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு படையின் சோதனை மையத்திற்கு வந்தார். சித்தார்த்திடம் முகக்கவசத்தை அகற்றுமாறும் ஐடி கார்டு காட்டுமாறும் கேட்கப்பட்டது.

ஏன் அடிக்கடி சோதனை நடக்கிறது
இது வழக்கமான பாதுகாப்பு நடைமுறைதான். அவருடைய குடும்பத்தினரின் உடமைகளும் பரிசோதனை செய்யப்பட்டது. சித்தார்த்தின் சோதனை நடந்த போது பணியில் இருந்தது தமிழகத்தை சேர்ந்த பெண் வீரர்தான் பணியில் இருந்தார். அவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழில்தான் அந்த பெண் பாதுகாப்பு வீரர் பேசினார். இந்தியில் பேசவில்லை. குடும்பத்தினரின் உடமைகளை அடிக்கடி சோதனை செய்ததாக சித்தார்த்தும் அவரது குடும்பத்தினரும்தான் கோபம் அடைந்தனர். அப்போது அங்கு வந்த தெலுங்கு பேசும் பொறுப்பு அதிகாரி ஏன் அடிக்கடி சோதனை நடக்கிறது என்பது குறித்து விளக்கம் அளித்தார்.

குற்றச்சாட்டுக்கள் தவறானது
10 நிமிடத்திற்குள் அங்கிருந்து கோபத்துடன் நடிகர் சித்தார்த் விமானம் ஏறும் இடத்திற்கு கிளம்பிவிட்டார். அவருடன் வந்தவர்களும் சென்றுவிட்டனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் யாரும் இந்தியில் பேசி சித்தார்த்திடம் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. சித்தார்த் வைத்த குற்றச்சாட்டுக்கள் தவறானது. விமான நிலையத்திற்கு வந்தது முதல் அவர் புறப்பட்டு செல்வது வரை உள்ள காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது" என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications