வைகையில் வெள்ளத்தால் மூழ்கிய தரைப்பாலம்.. குளிக்க, செல்பி எடுக்க தடை.. மாவட்ட ஆட்சியர் வார்னிங்!
மதுரை: வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகள் நிரம்பி அவற்றிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையின் முழு கொள்ளளவான 71 அடியில், 70 அடியை நீர்மட்டம் எட்டியுள்ளது. இதுமட்டுமல்லாமல் தொடர் மழைக் காரணமாக அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளதால், 7 பிரதான மதகுகளில் இருந்து 2,735 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றில் இறங்கி செல்பி எடுக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல் மதுரை மாவட்டத்தில் கோரிப்பாளையம் அருகே அமைந்துள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் தரைப்பாலத்தில் பொதுமக்கள் வாகனங்களில் பயணிக்கவோ, நடந்து செல்லவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் வைகை ஆற்றின் கரையோரம் உள்ள சாலை போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications