ஸ்காலர்னா சும்மாவா? வாழைப்பழத்தில் ஊசி இறக்கும் லாவகம் - நேற்று கோபம்.. இன்று உடன்பிறப்புகள் குஷி!
மதுரை : நேற்று நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவத்தால், திமுக உடன்பிறப்புகள் கொந்தளித்தனர். பழைய திமுக என்றால் இப்படி நடந்திருக்குமா என தலைமை மீது அதிருப்தியையும் தெரிவித்தனர்.
நாகரீக அரசியல் என்று கூறி, அமைச்சரையே தாக்கும் அளவுக்கு எதிர்க்கட்சிகளுக்கு சலுகை கொடுத்து விட்டோமா என திமுக தலைமை மீது கேள்வி எழுப்பி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
திமுக அமைச்சர்கள் பலரும் இந்தச் சம்பவம் குறித்து கண்டனங்களைப் பதிவு செய்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இதுதொடர்பாக வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தான், இன்று அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் 'வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும்' லாவகத்தோடு ஆங்கிலத்தில் பதிவிட்ட ட்வீட், உடன்பிறப்புகளை உற்சாகமாக்கியுள்ளது.

மதுரை சம்பவம்
காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் மதுரை அருகேயுள்ள டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீர மரணமடைந்தார். அவரது உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்பதற்காக மதுரை விமான நிலையத்தில் அக்கட்சியினர் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாஜகவினரை வெளியேற்ற உத்தரவிட்டார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பிடிஆர் காரை பாஜகவினர் முற்றுகையிட்டனர். அப்போது கார் மீது பாஜகவைச் சேர்ந்த ஒருவர் காலணியை வீசினார்.

கொந்தளித்த உடன்பிறப்புகள்
திமுக அமைச்சரின் காரில் பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் திமுகவினரை கொந்தளிக்கச் செய்தது. அமைச்சர் மீதே தாக்குதல் நடத்தும் நிலை ஏற்பட்டுவிட்டதே.. பாஜகவிற்கு எதிராக கமலாலயத்தை முற்றுகையிட்ட ஜெ.அன்பழகன் போன்றவர்கள் இன்று கட்சியில் இல்லையா? திமுகவில் கொள்கைப் பிடிப்பு கொண்ட முரட்டுத் தொண்டர்கள் காணாமல் போய்விட்டார்களா என சமூக வலைதளங்களில் பலரும் தங்களது ஆற்றாமையை வெளிப்படுத்தி இருந்தனர்.

நாளை பேசுகிறேன்
இந்தச் சம்பவம் குறித்து நேற்று இரவு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தியாகியின் உடலை நல்லடக்கம் செய்த நாளில், பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை. பிணத்தை வைத்து அரசியல் செய்யும் நபர்கள் குறித்து நாளை பேசுகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

மாறிய காட்சி
இதையடுத்து, செருப்பு வீச்சு சம்பவத்திற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நள்ளிரவில் சந்தித்து மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் மன்னிப்புக் கோரினார். பின்னர், பாஜகவில் இருந்து விலகவிருப்பதாகவும், தாய் வீடான திமுகவில் இணைவதில் தவறில்லை என்றும் சரவணன் தெரிவித்தார். பாஜகவினர் தாக்குதல் நடத்தும்போது அங்கிருந்த சரவணனே, திமுக பக்கம் சாய்ந்தது நள்ளிரவு நேரத்திலும் உடன்பிறப்புகளை உற்சாகம் கொள்ள வைத்தது.

சிண்ட்ரெல்லா செருப்பு
இந்நிலையில், இன்று காலையில், தனது காரில் வந்து விழுந்த செருப்பின் படத்தைப் பதிவிட்ட அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் தனது கட்சி உறுப்பினர்களுடன் அனுமதிக்கப்பட்ட காணாமல் போன 'பழைய விமான முனையத்தின் சிண்ட்ரெல்லா' தனது செருப்பு மீண்டும் வேண்டும் என நினைத்தால் வாங்கிக் கொள்ளலாம், எனது ஊழியர் அதனை பத்திரமாக எடுத்து வைத்துள்ளார்' எனப் பதிவிட்டார்.

நேற்றும் இன்றும்
அமைச்சர் மீதான தாக்குதல் சம்பவம் கட்சியினரை சங்கடப்படுத்திய நிலையில், நேற்றும் இன்றும் பிடிஆர் நடந்துகொண்ட விதம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. தியாகியை அடக்கம் செய்த நாளில் பிண அரசியல் செய்பவர்களைப் பற்றிப் பேச விரும்பவில்லை எனச் சொன்ன பிடிஆர், இன்று செருப்பு வீசியவருக்கே அதை வாங்கிச் செல்லுமாறு அழைப்பு விடுத்ததோடு, லாவகமாக ஏர்போர்ட் பாதுகாப்பு குளறுபடியையும் சுட்டிக்காட்டியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

கொண்டாடும் திமுகவினர்
அடாவடியாக இறங்கி பதிலடி கொடுக்கும் செயலில் இறங்காமல், ஒரே ட்வீட்டிலேயே பாஜகவினரை நிலைகுலையச் செய்துள்ளதாக திமுகவினர் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். படித்தவர் படித்தவர்தான்.. ஸ்காலர்னு நிரூபிச்சிக்கிட்டே இருக்கார்.. இங்க்லீஷ்ல அவர் போடுற ட்வீட்டை புரிஞ்சுக்கவே அவங்க எல்லாம் இன்னும் படிக்கணும் போல எனக் குறிப்பிட்டு வருகின்றனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications