மதுரையில் விடியவிடிய பெய்த கனமழை.. வெள்ளக்காடாக மாறிய சாலைகள்.. சிரமங்களை சந்திக்கும் மக்கள்!
மதுரை: மதுரையில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் விடியவிடிய கனமழை பெய்தது. குறிப்பாக மதுரையில் நேற்று இரவு 7 மணியளவில் தொடங்கிய மழை, விடிய விடிய பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதோடு, ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

விடியவிடிய பெய்த மழை
மதுரையில் மாலை 7 மணி முதல் விடிய விடிய பெய்த கனமழை பெய்தது. குறிப்பாக அண்ணாநகர், தெப்பக்குளம், மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம், முனிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. ஏற்கனவே மாட்டுத்தாவணி அருகே உள்ள கண்மாய் உடைந்து அப்பகுதி வெள்ளம் போல் சூழ்ந்து இருந்தது.

போக்குவரத்து பாதிப்பு
கடந்த 2 நாட்களாக அப்பகுதிகளில் தண்ணீரின் அளவு குறைந்த நிலையில், இரவு நேரத்தில் பெய்த மழையால் மீண்டும் வெள்ளக்காடு போல் காட்சியளிக்கிறது. இதனல அப்பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

கால்வாய் பணிகள் தேக்கம்
இதுமட்டுமல்லாமல் மாட்டுத்தாவணி அருகே உள்ள பகுதிகளில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இரவு முழுவதும் மழை பெய்ததால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக கால்வாய் அமைக்கும் பணிகளிலும் தேக்கம் ஏற்பட்டுள்ளன. அதேபோல் பல்வேறு சாலைகளும் வெள்ளக்காடு போல் காட்சியளிப்பதில், மக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

தென் மாவட்டங்களில் மழை
இதேபோல் திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் இரவு நேரத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. விருதுநகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. அதோடு, தேனி மற்றும் நெல்லை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications