அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றினாலும்.. மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை வரவேற்போம் - செல்லூர் ராஜு
மதுரை: தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கிடும் வகையில் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் துவங்கப்பட்டன. அதன்பின்னர் திமுக ஆட்சிக்கு வந்து விட்டது. சேலம் மாவட்டம், நவப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் அம்மா மினி கிளினிக் செயல்பட்டு வந்தது.
சில நாட்களுக்கு முன்பு நவப்பட்டி அம்மா மினி கிளினிக் முன்புறம் இருந்த பெயர் பலகை திடீரென மாற்றப்பட்டது. அதற்கு பதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் படத்துடன், 'முதலமைச்சர் மினி கிளினிக்' என பெயர் பலகை வைக்கப்பட்டது.

அம்மா மினி கிளினிக்
இது அ.தி.மு.க.வினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு அம்மா மினி கிளினிக் பெயரை மாற்றுவதை கைவிட வேண்டும் என்று அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இந்த நிலையியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

கடைநிலை ஊழியர்கள் மட்டுமே...
அப்போது அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றப்பட்டது குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜு, ' அம்மா மினிகிளினிக் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வந்தது. குறிப்பாக நகர்ப்புற, கிராமபுற சேர்த்து 2000-க்கும் அதிகமான கிளினிக் துவங்கி அனைத்து நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருந்தனர். தற்போது தமிழக அரசின் வீடு தேடி மருத்துவம் திட்டத்தில் கடைநிலை ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

அ.தி.மு.க வரவேற்கும்
அம்மா மினி கிளினிக் என்ற பெயரை முதல்-அமைச்சரின் மினி கிளினிக் என்ற பெயர் மாற்றினாலும் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் வகையிலான திட்டங்களை அ.தி.மு.க வரவேற்கும். இவ்வாறு செல்லூர் ராஜு கூறினார். இதனை தொடர்ந்து அவர் மேலும் கூறுகையில், ' அதிமுகவில் மூத்த தலைவர்களுக்குள் எந்த மனகசப்பும் கிடையாது, அன்வர்ராஜா பொது இடங்களில் ஒருமையில் பேசியது அனைத்து நிர்வாகிகளிடமும் மனக்கசப்பை ஏற்படுத்தியது,

ஜெயலலிதா நினைவிடம்
இதுபோன்ற நிலையில் கட்சி தலைமை மற்றும் நிர்வாகிகள் பொறுமையாக செயல்பட்டுள்ளனர். மேலும் அன்வர்ராஜா அதற்காக மன்னிப்பும் கேட்டு உள்ளார். ஆரோக்கியமான அரசியலை அ.தி.மு.க நடத்தி வருகிறது. ஜெயலலிதா நினைவிடம் என்பது வேறு, வாழ்ந்து மறைந்த இடம் என்பது வேறு. வேதா இல்லத்தில் ஜெயலலிதா வாழ்ந்த நினைவுகள் உள்ளது. எனவே உச்சநீதிமன்றத்திலோ., உயர்நீதிமன்றத்திலோ முறையீடு செய்து தமிழக அரசு வேதா இல்லத்தை நினைவிடமாக அறிவிக்கவேண்டும் என்று அவர் கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications