அர்ச்சனா கல்பாத்திக்கு அரசு பதவி! விஜய்யை வைத்து படம் எடுத்தால்தான் பொறுப்பா? ஆர்பி உதயகுமார் கேள்வி

Subscribe to Oneindia Tamil

மதுரை: விஜய்யை வைத்து படம் எடுத்தால் தான் அரசுப் பதவிகள் கிடைக்கும் என்றால், இது எப்படி ஜனநாயகம் ஆகும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். பிகில், கோட் படங்களின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு தமிழக அரசின் முக்கிய குழுவில் இடம் கொடுக்கப்பட்டிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.

விஜய் நடித்த பிகில், கோட் ஆகிய படங்களை தயாரித்த அர்ச்சனா கல்பாத்திக்கு தமிழக அரசின் அறங்காவலர் நியமனக் குழுவின் உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் வருவாய் உள்ள கோயில்களுக்கு தகுதியான விண்ணப்பத்தாரர்களை அழைத்து அறங்காவலரை நியமிக்க 7 பேர் கொண்ட குழுவை அறநிலையத்துறை நியமித்துள்ளது.

Archana Kalpathi Vijay TVK

இந்த 7 பேர் கொண்ட குழுவில் அர்ச்சனா கல்பாத்தியும் இடம்பெற்றுள்ளார். முதல்வருக்கு நெருக்கமாக இருக்கும் சிலரின் சிபாரிசு காரணமாக அர்ச்சனா கல்பாத்திக்கு இந்த பதவி அளிக்கப்பட்டுள்ளதாக முனுமுனுப்புகள் எழுந்துள்ளன. ஏற்கனவே ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி பதவி அளிக்கப்பட்டது.

அதேபோல் மாஸ்டர், லியோ மற்றும் ஜனநாயகன் படத்தின் இணைத் தயாரிப்பாளரும், மேனேஜருமான ஜெகதீஷ் பழனிசாமிக்கு முதல்வரின் தனிச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக திரைப்பட கல்லூரி முதல்வர் பதவி லியோ, பீஸ்ட் படங்களின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் விஜய்யை வைத்து சினிமாவில் படங்கள் தயாரித்தவர்களுக்கும், உடன் பணியாற்றிய கலைஞர்களுக்கும் தொடர்ச்சியாக அரசுப் பதவி வழங்கப்பட்டு வருவது சர்ச்சையாகி இருக்கிறது. இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசுகையில், விஜய்யை வைத்து படம் எடுத்தால் தான் அரசுப் பதவிகள் கிடைக்கும் என்றால், இது எப்படி ஜனநாயகம் ஆகும்?

விஜய்யின் படங்களில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தற்போது அரசுப் பதவிகளில் சத்தமில்லாமல் நியமித்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். அதிமுக மட்டுமல்லாமல் பல்வேறு கட்சிகளும் அர்ச்சனா கல்பாத்தியின் நியமனத்திற்கு எதிராக பேசத் தொடங்கி இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+