மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதெல்லாம் பெரிய வித்தையில்லை, ரெய்டு நடக்குது.. கவனமா இருங்க.. செல்லூர் ராஜூவை கிண்டல் செய்த பிடிஆர்

Google Oneindia Tamil News

மதுரை: செல்லூர் ராஜூவுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதை கண்டறிவது பெரிய வித்தையில்லை, முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடப்பதால் செல்லூர் ராஜூ எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Recommended Video

    ஏற்கனவே பல ரெய்டுகள் நடக்கிறது.. செல்லூர் ராஜு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - PTR எச்சரிக்கை

    மதுரையில் ஸ்மார்ட் சிட்டி உள்பட எந்த வளர்ச்சி திட்டத்திலும் தவறு நடக்கவில்லை என்றும் அப்படி ஏதேனும் தவறு செய்தார்கள் என்றால் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். இதற்கு தான் இப்படி ஒரு பதிலை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

    நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பொதுமக்கள் மற்றும் கடந்த அதிமுக அரசின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூட கருத்து கேட்காமல் மூன்று அமைச்சர்களின் வருமானத்தைக் கருத்தில் கொண்டு மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை.. குப்பையை அகற்றி, போட்டோ எடுத்ததும், அங்கேயே மூட்டையை விட்டு சென்றதாக சர்ச்சை: பாஜக விளக்கம் சென்னை.. குப்பையை அகற்றி, போட்டோ எடுத்ததும், அங்கேயே மூட்டையை விட்டு சென்றதாக சர்ச்சை: பாஜக விளக்கம்

    முறைகேடுகள்

    முறைகேடுகள்

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றங்கரையில் போடப்பட்ட சாலைகள் பல இடங்களில் பிளவு ஏற்பட்டு உள்ளது அந்த பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதுபோன்ற திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் கூர்ந்து கண்காணிப்படவேண்டும். இதுபோன்று முறையீடுகள் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் மத்திய மாநில தணிக்கை துறை மூலம் கூர்ந்து கண்காணித்து எவ்வாறான முறைகேடுகள் நடந்துள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பிடிஆர் கூறினார்.

    அமைச்சருக்கு பதில்

    அமைச்சருக்கு பதில்

    இந்நிலையில் தந்தை பெரியார் 143 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்திக்கையில் அவர் பேசும் போது, மதுரையில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு முன்னாள் அமைச்சர்கள் காரணம் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்த கருத்திற்கு பதில் அளித்தார்.

    பாலங்கள் அமைப்பு

    பாலங்கள் அமைப்பு

    அப்போது செல்லூர் ராஜூ கூறும் போது, "மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. சட்டம் உங்கள் கையில் இருக்கிறது முடிந்தால் நடவடிக்கை எடுத்து மக்கள் முன்பு நிறுத்துங்கள். பல்லாயிரம் கோடி மதிப்பிலான மக்கள் நல திட்டங்களை பொத்தாம் பொதுவாக குறை சொல்ல கூடாது.அதிமுக ஆட்சியில் பல்வேறு பாலங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

    பெரியார் பேருந்து நிலையம்

    பெரியார் பேருந்து நிலையம்

    நிதி அமைச்சர் தொகுதியில் தான் கடந்த ஆட்சியில் 75% பணிகள் நடைபெற்று உள்ளன. அவர் இப்படி தவறாக பேசுவதால் மக்கள் தான் அவரை தவறாக நினைப்பார்கள். பெரியார் பேருந்து நிலையம் தவறான திட்டத்தில் கட்டப்பட்டால் உலக வங்கி நிதி கொடுத்து இருப்பார்களா? அந்த திட்டம் குறித்த எந்த விவரமும் எனக்கு தெரியாது, அது குறித்து எங்களுடைய கவனத்திற்கு வரவில்லை. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என அமைச்சர் பேச கூடாது" என்றார்.

    ரெய்டு வழக்கம்

    ரெய்டு வழக்கம்

    அமைச்சர் கேசி வீரமணி வீட்டில் நடத்தப்பட சோதனை குறித்து பேசியவர், "ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ரெய்டு நடப்பது வழக்கம் தான். தவறு இருந்தால் அவர்கள் நடவடிக்கை எடுக்கட்டும். எங்களுக்கு மடியில் கணமில்லை, எனவே வழியில் பயமில்லை" என்றார்.

    ரெய்டு நடக்குது

    ரெய்டு நடக்குது

    இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதை கண்டறிவது பெரிய வித்தையில்லை, முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடப்பதால் செல்லூர் ராஜூ எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    English summary
    Finance Minister Palanivel Thiagarajan said it was not a big deal to find any malpractice in the Smart City project and advised Cellur Raju to be vigilant as raids were being carried out on the homes of former ministers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X