அண்ணாமலைக்கு அமித் ஷா அசைன்மெண்ட்..எங்களுக்கு எடப்பாடி! நாலாந்தர அன்பரசன்..ஆர்பி உதயகுமார் அட்டாக்..!
மதுரை: அண்ணாமலைக்கு அசைன்மென்ட் கொடுப்பது அமித்ஷாவாக இருக்கட்டும், ஆனால் அதிமுக 2 கோடி தொண்டர்களுக்கும் கொடுக்கும் அசைன்மென்ட் எடப்பாடியார் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதுதான் எனவும், ஜெயலலிதாவைப் பற்றி நாலாந்தரமாக பேசிய தா.மோ.அன்பரசனை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டுமென அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் ஓடைப்பட்டி கிராமத்தில் அதிமுக உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர்," அண்ணாமலைக்கு அசைன்மென்ட் கொடுப்பது அமித் ஷாவாக இருக்கட்டும். ஆனால் அதிமுகவின் 2 கோடி தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அசைன்மெண்ட் கொடுத்துள்ளார். அது அதிமுகவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர செய்ய வேண்டும் என்பது.
உங்கள் அசைன்மென்ட் என்னவாகும் என்பது ஆண்டவனுக்குத் தான் தெரியும். ஆனால் அதிமுக தொண்டர்கள் இதயத்தில் சுமந்து கொண்டுள்ள அசைன்மென்ட் அது. எட்டு கோடி தமிழர்களுக்கும் உள்ள அசைன்மென்ட் மீண்டும் அதிமுக ஆட்சிக்கட்டில் அமைகின்ற அசைன்மென்ட். சத்துணவு திட்டத்தை கொடுத்த சரித்திர நாயகன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். கட்சியை தொடங்கியவர்கள் யார் வேண்டுமானாலும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று சொல்வார்கள்.
அதைப்பற்றி கவலையில்லை. செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சிக் கூட்டத்தில் அதிமுகவைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. வரலாறு தெரியாதவர்கள் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள். உண்மையான அதிமுக தொண்டனின் நெஞ்சில் ஈட்டி பாய்ந்ததை போல் உள்ளது. செயல்வீரர் கூட்டத்தில் பேசும்போது உங்கள் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்றால் கட்சி திட்டத்தைப் பற்றி பேசுங்கள். அதிமுகவை பற்றி பேசுவதற்கு என்ன யோக்கியதை உள்ளது. என்ன தகுதி உள்ளது.
எதற்காக நீங்கள் பேசுகிறீர்கள்? இப்போது சொல்கிறேன் அண்ணாமலை அவர்களே மீண்டும் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அரசு மக்கள் ஆதரவோடு மலரும். ஆளுகிற கட்சி திமுக இன்றைக்கு கள்ளச்சாராயம் மரணம் இறந்தவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை. அதிமுகவுடன் பயணித்தீர்கள் திடீரென வேறுபட்டு இருக்கிறீர்கள்.
இதைப் பற்றி யாரும் வருத்தப்படவில்லை. அதிமுக என்பது நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. உங்களைப் போன்ற தலைவர்கள் அல்ல. எடப்பாடி 50 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர். இன்றைக்கு இயக்கத்தை எதிரிகளிடமிருந்து துரோகிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக தன்னை அர்ப்பணித்து உழைத்தவர். இந்த அசைன்மென்ட் தமிழ்நாட்டிற்கு வேலை இல்லை.
தமிழ்நாட்டிற்கு நிதி இல்லை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்ய முடியும். ஆகவே என் பதவியை ராஜினாமா செய்கிறேன் அண்ணாமலை சொல்லி இருந்தால் அவர் தமிழ்நாட்டு மக்களை நேசிக்கிறார் என நினைப்போம். ஆனால், வாய் கிழிய பேசினால் தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்து விடுவார்களா? அதிமுகவை பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன யோக்கியம் உள்ளது.
அமைச்சர் தா.மோ.அன்பரசன் அமைச்சர் பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர். அம்மாவைப் பற்றிய பேசியதற்கு மு க ஸ்டாலின் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. அம்மாவைப் பற்றி நாலாந்தரமாக பேசிய தா.மோ.அன்பரசனுக்கு இன்னமும் கண்டனம் தெரிவிக்காமல் மு.க.ஸ்டாலின் அவர்களை உண்மையான சபை நாகரிகம், அரசியல் நாகரிகம், அரசியல் பண்பாட்டை தமிழர் கலாச்சாரத்தை கடைப்பிடிக்கிற ஒரு தலைவனாக இருப்பாரேயானால் உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து தா.மோ. அன்பரசனை நீக்க வேண்டும்" என்றார்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்











Click it and Unblock the Notifications