மல்லிகைப் பூவே மல்லிகைப்பூவே பார்த்தாயா... மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு
மல்லிகை பூக்கள் இந்தியாவிலேயே அதிகம் விளைவதும், விற்பனையாவது மதுரை மாவட்டத்தில் தான் மல்லிகளின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது மதுரை. மனம் மயக்கும் மல்லிகைப்பூக்களுக்கு தற்போது புவி சார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
மதுரை: மல்லிகை பூக்கள் பெரும்பாலும் இறைவனுக்கு படைக்கவும், பெண்கள் தலையில் சூடி அழகு பார்க்கவும் அதிகம் பயன்படுகிறது. மனம் மயக்கும் மதுரை மல்லிகைப்பூக்களுக்கு தற்போது புவி சார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மதுரை மல்லிகைப்பூக்களுக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. மல்லிகளின் தலைநகரம் என்று மதுரை அழைக்கப்படுகிறது. ரூ. 66.28 கோடி ரூபாய் அளவிற்கு கடந்த ஆண்டு மதுரை மல்லி வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை என்றாலே நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மனும், மதுரை மல்லியும்தான். 'மதுரை மல்லி', மல்லியின் மணம் மதுரையில் மட்டும் மணக்கவில்லை உலக அளவில் மதுரை மல்லியின் மணம் வீசிக்கொண்டுள்ளது. பெண்களின் கருமையான கூந்தலில் வெண்மைநிற மல்லிகையை சூடிக்கொள்வதே தனி அழகுதரும்.
சந்தைகளில் மதுரை மல்லி எனச் சொல்லி விற்கப்படும் மல்லிகைப் பூக்கள் எல்லாமே, 'மதுரை மல்லி' ஆகாது. மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் விளையும் மல்லி மட்டுமே மதுரை மல்லிகை. மற்ற மல்லிகை ஒரு நாளில் வாடிவிடும், ஆனால் மதுரை மல்லி, இரண்டு நாள்கள் வரை வாடாமல் தாக்குப்பிடிக்கும்.

மணக்கும் மதுரை மல்லி
மதுரை மல்லி பார்க்கவே அழகாக பளபளவென வெண்மையான நிறத்தில் காணப்படும். மதுரை மல்லி, மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் விளைகிறது. மதுரை மல்லிக்கான புவிசார் குறியீடு, 2010-ம் ஆண்டு மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மல்லி விவசாய சங்கத்தினர் விண்ணப்பித்தனர்.

ஏற்றுமதியாகும் மல்லி
மதுரையில் காலையில் பறிக்கும் மல்லிகைப்பூ, இரவு சிங்கப்பூரில் சந்தைக்குச் சென்றுவிடும். அந்த அளவுக்கு மதுரை மல்லிக்கு உலக அளவில் வரவேற்பு இருக்கிறது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இந்த மல்லிப்பூ அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. துபாய், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவிற்கு இந்த மதுரை மல்லி ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகத்திலிருந்து மட்டும் ஆண்டிற்கு பல கோடி ரூபாய் அளவிலான மல்லிகைப் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றனர்.

தனித்துவமான மல்லிகை
சாதாரண மல்லியின் மொட்டானது இரண்டு முதல் மூன்று அடுக்குகளைக் கொண்டிருக்கும். மதுரை மல்லியின் இதழ்கள் வட்ட வடிவில் நான்கு அடுக்குகளைக் கொண்டது. அதனால் இம்மல்லியின் மொட்டுக்கள் தாமதமாகவே விரியும். சர்வதேச சந்தைகளில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் சந்தை மதிப்பு உயர்ந்து, கலைஞர்களுக்கு நல்ல வருவாய் ஏற்படுத்திடவும் புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்படுகிறது

மல்லிக்கு புவிசார் குறியீடு
இந்த புவிசார் குறியீடு மதுரை மல்லி, பட்டன் ரோஸ், அள்ளி மலர், சம்மங்கி பூ, மேரிகோல்டு பூ ஆகிய பூக்களுக்கு புவி சார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த ரக பூக்கள் நிலக்கோட்டை, திண்டுக்கல், சத்தியமங்கலம், ஆகிய பகுதிகளில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. இங்கு பயிர் செய்யப்படும் பூக்கள் தான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது குறிப்பிடத்தக்கது. இந்த புவிசார் குறியீடு மதுரை மல்லி, பட்டன் ரோஸ், அள்ளி மலர், சம்மங்கி பூ, மேரிகோல்டு பூ ஆகிய பூக்களுக்கு புவி சார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த ரக பூக்கள் நிலக்கோட்டை, திண்டுக்கல், சத்தியமங்கலம், ஆகிய பகுதிகளில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. இங்கு பயிர் செய்யப்படும் பூக்கள் தான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதிக்கு உதவும்
மதுரை மல்லி விவசாயிகள் சங்கத்தினரிடம் பெறும் மல்லிகையை மட்டுமே உலகளவில் ''மதுரை மல்லி'' என்றழைக்க வேண்டும். ஏற்றுமதிக்கு இக்குறியீடு உதவும். மல்லி விவசாயிகளுக்கு கூடுதல் விலை உள்ளிட்ட பலதரப்பட்ட பலன்கள் கிடைக்கும்.

புகழ் அதிகரிப்பு
புவிசார் குறியீட்டு பொருள்கள் சட்டம் 2003ல் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கைவினை கலைஞர்களை பாதுகாக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது புகழ்பெற்ற மதுரை மல்லிகைப் பூவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மல்லியின் தனி சிறப்பு
புவிசார் குறியீடு சான்றளிக்கப்பட்ட மதுரை மல்லி மற்றும் பிற பூக்கள் அமெரிக்கா மற்றும் துபாய்க்கு தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் இந்த ''மதுரை மல்லி'' பெயரில் மற்ற பகுதி மல்லிகைப் பூவை விற்பதோ அல்லது பிற பூக்களை இதனுடன் கலப்படம் செய்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு 2 லட்சம் அபராதத்துடன், 5 ஆண்டு சிறைத்தண்டனை உண்டு.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications