தெருக்களுக்கு சாதி பெயரா? நீதிமன்ற படிக்கட்டேறிய சமூக ஆர்வலர்! நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு
மதுரை : மதுரை பொன்மேனி பிரதான சாலை பகுதியில் ராஜ் பிள்ளை என்ற சாதி பெயரில் அமைந்த தெரு பெயரை நீக்க கோரிய வழக்கில், வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை பொன்மேனி பிரதான சாலை பகுதியில் மீனாட்சி நகர் அமைந்துள்ளது. இந்த நகரின் ஒரு தெருவுக்கு ராஜ் பிள்ளை தெரு என சிலர் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
இந்நிலையில் சாதிப் பெயரை நீக்கக்கோரி, மதுரை அரசரடியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.

சாதிப் பெயர்
அதில், "மதுரை பொன்மேனி பிரதான சாலை பகுதியில் மீனாட்சி நகர் அமைந்துள்ளது. பகுதியில் உள்ள இரண்டு தெருக்களுக்கு மீனாட்சி நகர் முதலாவது தெரு மற்றும் இரண்டாவது தெரு என பெயரிடப்பட்டு 1991 முதல் நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் மூன்றாம் தரப்பினர் சிலர் கடந்த 2021 நவம்பரில் மீனாட்சி நகரில் ராஜ் பிள்ளை தெரு என தேர்தலுக்கு முன்பாக பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

அமைச்சரின் ஊழியர்
ராஜ் பிள்ளை என்பவர் அமைச்சர் ஒருவரிடம் பணி புரியும் கணேசன் என்பவரது தாத்தாவின் பெயர் இது. தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் அழுத்தம்கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மீனாட்சி நகர் இன்று இருக்கும் நிலையில் தெருவின் பெயர் மாற்றப்பட்டுள்ளதால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழக அரசு அறிவிப்பு
அதோடு தமிழக அரசு தெருக்களின் பெயர்களில் சாதிப் பெயர்களை இருக்கக் கூடாது என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ராஜ் பிள்ளை என ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை வைத்துள்ளது ஏற்கத்தக்கதல்ல ஆகவே மனுதாரரின் மனுவின் அடிப்படையில் சாதி பெயரில் அமைந்த தெரு பெயரை நீக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

நீதிபதி உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வு வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
-
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications