படிக்காமல் ஏன் ஃபார்வர்டு செய்தீர்கள்? - எஸ்.வி.சேகருக்கு நீதிபதி கேள்வி: வழக்கை ரத்து செய்ய மறுப்பு
மதுரை: பெண் பத்திரிகையாளர்கள் பற்றிய அவதூறான பதிவை படிக்காமல் ஏன் ஃபார்வேர்ட் செய்தீர்கள் என்று பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் எஸ்.வி.சேகருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்திருக்கிறது நீதிமன்றம்.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை பதிவை படிக்காமல் ஃபார்வேர்டு செய்துவிட்டு, மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா என்ற கேள்வியை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேட்டுள்ளது. மேலும் வழக்கை ரத்து செய்ய முடியாது எனவும், நீதிபதி தெரிவித்துள்ளார்.

பெண் பத்திரிக்கையாளர்கள்
வழக்கு குறித்த விவரம் இதுதான்: பெண் பத்திரிகையாளர்கள் நிறுவனங்களில் பணிபுரிவது இப்படித்தான் என்று.. தரக்குறைவான கருத்தை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ் வி சேகர் 2018ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் பத்திரிக்கையாளர்கள் உட்பட பல தரப்பினரும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பலர் புகார் மனுக்களை அளித்துள்ளனர்.

4 பிரிவுகளில் வழக்குகள்
அதன் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் மூன்று பிரிவுகள் மற்றும் பெண்கள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஒரு பிரிவு என 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் எஸ்.வி.சேகர்.

மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர்
இந்த வழக்கு நீதிபதி நிஷா பானு முன்னிலையில், இன்று, விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தரப்பில் அந்த பதிவை படிக்காமல் பேஸ்புக்கில் ஃபார்வேர்ட் செய்து விட்டதாகவும் அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு ரத்து கிடையாது
அதேநேரம், மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா என்று கேட்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்ய முடியாது என தெரிவித்துவிட்டார். வழக்கை மேலும், ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார் நீதிபதி.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications