மதுரை தவெக நிர்வாகி சர்மிளா.. நிலத்தை அடகு வைத்து கிடைத்த ரூ.16 லட்சம்.. மொத்தமாக காலி
மதுரை: ரூ.16 லட்சம் பெற்றுக்கொண்டு தன்னை த.வெ.க. மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் ஏமாற்றியதாக வீடியோவில் கூறிவிட்டு, அக்கட்சியின் பெண் நிர்வாகி சர்மிளா எடுத்த முடிவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துமவனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐ.டி. நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்தால் வட்டி தருவதாக கூறி தவெக மாவட்ட செயலாளர் ஏமாற்றி பணம் பறித்ததாக சர்மிளா வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
அதிக பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறும் யாரையும் எந்த காலத்திலும் நம்பக்கூடாது. ஒரு முதலீடு என்றால், ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்ற நிறுவனத்தில் செய்ய வேண்டும். அதை தவிர வேறு எந்த முதலீட்டிலும் லாபம் வரும் என்று சொன்னாலும் நிச்சயம் உறுதி கிடையாது . அதேபோல் ஒரு முதலீட்டிற்கு 10 சதவீததத்திற்கு மேல் வருமானம் என்று சொன்னாலும் நம்பக்கூடாது.

பங்குச்சந்தை போன்ற ரிஸ்க் உள்ள இடங்களில் சில நேரங்களில் 12-15% கிடைக்கலாம், ஆனால் அது "உறுதி" கிடையாது. எப்போதுமே ரிஸ்க் இல்லாத முதலீடுகளில் ( எப்டி, தங்கம்) வட்டி விகிதம் 7-8 சதவீதத்திற்குள் தான் இருக்கும். நிஜமான லாபம் என்பது பணவீக்கத்தை விட 2-3 சதவீதம் அதிகமாக இருந்தாலே பெரிய விஷயம். ஆனால், 10 சதவீதத்திற்கு மேல் தருவதாகச் சொல்பவர்கள், மக்களின் அடிப்படைப் புரிதல் இல்லாததைத்தான் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்படித்தான் மதுரை சர்மிளா ஏமாந்துள்ளதாக கூறப்படுகிறது
மதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் சர்மிளா என்பவர் தமிழக வெற்றிக் கழக மதுரை தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராகவும், சுற்றுச்சூழல் அணி நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் அவர் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வாழ்ககையை முடித்துக் கொள்ள முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே சர்மிளா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில்
த.வெ.க.வில் மகளிர் அணி தலைவியாக இருந்த என்னை தற்போது சுற்றுச்சூழல் அணி நிர்வாகியாக மாற்றினர். வசதியானவர்களை கட்சியில் சேர்த்து விட்டால்தான் நானும் வளர முடியும், நீங்களும் வளர முடியும் என மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் தங்கபாண்டி கூறினார். நான் சிலரை அழைத்துவந்தபோது அவர்களிடம் பெரிய தொகை வாங்கிவிட்டு, என்னிடமும் பெரிய தொகை வாங்கிவிட்டார். காசு இல்லை என்று சொன்னபோது நகையை விற்றாவது காசு கொடுங்கள் என்று கேட்டார்.
அவர் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்தால் வட்டி தருவதாக கூறினார். அதை நம்பி எனது தாயாரின் நிலத்தை அடகுவைத்து ரூ.16 லட்சம் கொடுத்தேன். இப்போது வரை எனக்கு வட்டி தரவில்லை. நிலத்தை அடகு வைத்ததற்கு நான் வட்டி செலுத்தி வருகிறேன். எனவே மன உளைச்சலில் வாழ்க்கை முடித்துக் கொள்ள முயற்சி செய்தேன். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் ஏதாவது ஆனால் அதற்கு தங்கபாண்டிதான் காரணம். அவரிடமிருந்து பணத்தை வாங்கி கொடுங்கள். என்னை மிரட்டி பதவியில் இருந்து விலக்கினார்கள். இவ்வாறு சர்மிளா வீடியோவில் கூறியிருக்கிறார். இந்த வீடியோ வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
-
எம்ஜிஆர், ஜெயலலிதா போலவே விஜய்யும்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் என்ன ஸ்பெஷல்? -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
விஜய்யை அவமானப்படுத்திய கர்நாடக காங்., அமைச்சர் யுடி காதர்? வரவேற்க போய் பூங்கொத்து கூட கொடுக்கலையே! -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
தமிழக பள்ளிக்குள் சாதி, மத அடையாளங்களுக்கு இடமில்லை.. நேரடியாகவே சொன்ன அமைச்சர் ராஜ்மோகன்! -
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக! -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
அரசு மருத்துவமனைகளில் புரட்சி.. இனி மொபைல் ஆப் மூலம் டோக்கன் முன்பதிவு.. விஜய் அரசின் புதிய முடிவு! -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications